அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலின் இரண்டாம் பாகம் (Part -2 ) 
 என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.

எல்லா நாடுகளையும் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்கா செயல்படுகிறது என்று சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்தவர் ஜான் பெர்கின்ஸ். பொருளாதார அடியாளாகப் பல்வேறு நாடுகளில் செயல்பட்டவர் அவர்.

பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சுரண்டலைப் பற்றி எழுதத் தொடங்கினார். நேரடியான போர் முறையில் அல்லாது மறைமுகமாக உலகையே ஆள அமெரிக்கா கையாளும் தந்திரங்கள் இந்த இரண்டு நூல்களிலும் பதிவாகியிருக்கின்றன.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்  என்கிற இந்த  நூலாசிரியரின் முதல் பாக நூல் , தமிழ் வாசகர்களிடையே அதிகம் ஊன்றிப் படிக்கப்பட்டு, பல பதிப்புகளை கண்டது. இந்த நுள் அதன் இரண்டாம் பகுதியாகும். இந்த 2 பகுதிகளையும் ஒரு  சேர வாசிப்பது சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை அறிவுபூர்வமாய்
அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாகும்

------------------------------------------

* தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும்

செ. சண்முகசுந்தரம்,. இரா. தமிழ்க்கனல், யமுனா ராஜேந்திரன்

வரலாற்றின் பல முக்கியப் பக்கங்கள் நினைவிலிருந்து அழியாமலிருக்க அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அப்படி யான வரலாற்றுத் தேவையை உணர்ந்து, கடந்த 2017 ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ‘தை எழுச்சி’யாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்ட நிகழ்வு , 34 தமிழக ஆளுமைகளின் கட்டுரைகளால் ஆவணமாகி உள்ளது. 

இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்திய மாநிலங்களிலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஆதரவுக் கிளர்ச்சிகளை உண்டாக்கியது. தலைநகரான சென்னையை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் மதுரை, கோவையில் நடைபெற்ற நிகழ்வுகளையும் பற்றியதாகக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரைகளைச் சமூக தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கள ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ‘அரசியல் பகுப்பாய்வு: பன்முகப் பார்வைகள்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு நம்மை இட்டுச்செல்கின்றன

-------------------------------------------
லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால், ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த நூல்களின் வாசிப்பு அனுபவத்தினை இங்கு கருத்திடலாம் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages