விட்டில்களோடு கோபம் என்றா கேட்கிறாய்? -
அட்டாளை நிஸ்ரி
இந்த இரவுகளையும் அதன் வசீகரத்தையும் வெறுத்துக் கொண்டிருக்கிறாயா?
முன் அறையின் விளக்குகள் அணைக்காமலும்
அய்யாஷின் ஆடை அழுத்தாமலும் விலகிப் போவதன் மர்மம் என்ன மர்யம்?
விட்டில்கள் பாவம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்
"ஆயிஷா உம்மாவைக் கொஞ்சம் சிரிக்கச் சொல்"
வியர்த்துக் கொட்ட மின்சாரச் சிக்கனம் வேண்டாமே,
மின் விசிறியோடும் கோபமா என்ன?
வாசலின் தனிமை படர்ந்த விறாந்தை அணைத்துக் கொள்கிறது
கொடியில் அசையும் சாம்பல் முந்தாணை மெல்லச் சிரிக்கிறது மர்யம்.
இப்போது குளிர்ந்த காற்று வீசும்
காற்றோடு சேர்த்து நீயும்
"ஆயிஷா மழை வரப் போகுது வாப்பாவ வந்து தூங்கச் சொல்லு"
அதட்டிக் கொண்டே சிரிப்பாய்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment