(தன்னைப்பற்றி கவிதை பாடச்சொல்லுபவர் மத்தியில் என்னைப்பற்றி 'அஸ்மின்'எனும் தலைப்பில் கவிதை பாடச்சொன்ன தோழிக்காக......
சற்று மிகையாகவே இருக்கும் பொறுத்தருளவும்.)
#அஸ்மின்
முத்தமிழும்
முத்தமிடும்
முத்துநிகர் பாட்டு
முக்கனியும் முக்குளிக்கும்
முப்பொழுதும் கேட்டு
வித்தகனே (அஸ்)மின்தமிழில்
புகந்துவிளையாடு
வித்தைகளை கற்றவர்க்கு
இல்லை இங்கு ஈடு..
சித்தனெனப் பித்தனென
நகைத்திடுவார் இங்கு
அதை
சித்தமதில் ஏந்திடாது
பூம்புனலாய்ப் பொங்கு
யுத்தமிடும்
ஆயுதங்கள் கவிதைகளில்
செய்தாய்
நித்தமொரு புதுமையினை
வார்த்தையிலே
நெய்தாய்
'அத்தர்'மிகு
பாக்களினால்
பூக்களையும் கொய்தாய்
அழகு மிகு
யாவிலுமே
ஆகிவிட்டோம் கைதாய்
தோல்விகளை கண்டவன்நீ
வெற்றிபல கண்டாய்
தோற்றவரின் நெஞ்சினையும்
தேற்றியதால் வென்றாய்
கேள்விக்குறி வாழ்வுதனை
மாற்றிவிட்டாய் நன்றாய்
வேள்விபல செய்ததினால்
வெற்றிபெற்றேன் என்றாய்...
எதிரிகளோ ஈரமின்றி
சொற்களினை எறிவார்
உன் எளிமையினை
வலிமையினை
அறிந்தவரே அறிவார்
குதிரைநீ கழுதையல்ல
என்றவர்க்கு கூறு
குப்பைகளை
குப்பையிலே வீசிவிடப்பாரு..
அன்றுனக்கு மேடையிலே
தொடை பயத்தில்
நடுங்கும்
இன்று உன் கவிகேட்டு
மேடையன்றோ நடுங்கும்
அன்றுநீ வாசிப்யை
தினம் நெஞ்சில் சுமந்தாய்
இன்றுநீ அதனால்தான்
பலர் நெஞ்சில் அமர்ந்தாய்
அன்றுநீ மூத்த கவி
பலரையுமே படித்தாய்
இன்றுநீ அதனால்தான்
முன்னிலையை பிடித்தாய்
அன்றுநீ புதுமையிலே
மரபுதனை கலந்தாய்
இன்றுநீ அதனால்தான்
பலரையுமே கவர்ந்தாய்
அன்றுநீ புறக்கணிப்பால்
பெரும்புயலாய் எழுந்தாய்
இன்றுநீ அதனால்தான்
கடல் கடந்தும் மிளிர்ந்தாய்
அன்று உன் துயர் துடைக்க
யாருமின்றி இருந்தாய்
இன்றுநீ பலருக்கு
மாறிவிட்டாய் மருந்தாய்
அன்றுஉன்
கவிதைகளை
புலம்பலெனும்
உலகம்
இன்றுஉன் புலம்பலையும்
கவிதையென புகழும்…!
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment