நினையாய் வாழி தோழி...
சாஜித் அஹமட்
சங்ககால இலக்கியங்கள் ரசனையில் உச்சமானவை. காதலின் அதி அற்புதத் தருணங்களை அக்கால செய்யுள்களில் அலாதியாக உணரலாம். ஒருதலைக் காதல் என்றும் ஒரு தலைக் காமம் என்றும் அகத்தினை மரபினை போட்டுடைத்த காலமது. தலைவன் தலைவி மீது காதல் கொண்டு பித்து பிடித்தவன் போல அலைந்து திரிவான். தன் காதலியை வீதிகளில் எதிர்பாராமல் கண்டு விட்டால் போதும், இலேசாக உரசி மதி மயக்கம் கொண்டு காதலின் போதையில் அவன் ஆடும் கதகளிக்கு ஒரு அளவேயில்லை. இவ்வாறெல்லாம் பாட்டுடைத் தலைவனும், தலைவியும் கும்மாளமடித்தாலும் சங்ககாலத்தின் தோழி தனித்துவமான லெஜன்ட்தான்.
தலைவிக்கு ஆறுதல் கூறுவாள், தலைவனை வழிப்படுத்துவாள், தலைவனுக்கு துணையாவாள், நாட்டு வளம் பாடுவாள், களவொழுக்கம் நாடி வரும் தலைவனுக்கு வேலியாவாள் இப்படியே எக்கச்சக்கமான பொறுப்புக்களை சுமந்திருந்தாள் தோழி. சங்ககாலத்தின் செய்யுள்களைப் படிக்கின்ற போதெல்லாம் தலைவியின் காதல் என்னை அவ்வளவு கலங்கப்படுத்தியதில்லை. ஆனால் தோழியின் ஞாபங்கள் அலைமோதிக் கொண்டேயிருக்கும். அவளின் அற்புதமான பேச்சின் இறுதி வரிகள் செய்யுளின் தரத்தினை தூக்கிவிடும். நகைப் பூங்கொத்து எனும் செய்யுளில் தலைவியைப் பார்த்து தோழி கேட்கும் வார்த்தைகள் ஆத்மார்த்தமான காதலின் நெடும் பனைகள். குற்றாலக் குறவஞ்சியில் அவள் கூறும் மலை வளம் நயத்தலின் அழகு. தலைவனுக்கு டிஸ்கௌன்டில் தோழி மாறி விடுவதுமுண்டு. அதில் அவள் கொள்ளும் நாணம், அச்சம், வெட்கம் படு அபாயகரமானவை. தோழியின் கூதலுக்கு நிகராக முடியாத தலைவின் பலவீனத்தினைச் சொல்லும் காட்சிகளவை.
இந்த நேரம் ஒரு பழைய சினிமாப் பாடல் மண்டையில் தட்டுகிறது. "வாரய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ, மண மேடையில் தன்னில் மனமே காணும் திரு நாளைக் காண வாராயோ" அற்புதமான பாடல். சங்கப் பாடல்களை கண்ணதாசன் கொப்பி செய்து சினிமாவிற்கு பரிசளித்த பொழுதுகளில் வசமாகக் சிக்கிக் கொண்ட பல்லவிகள் இவை. ஆனாலும் பிரதான பாத்திரத்தினை விட துணைப் பாத்திரம் பிரதானத்தின் மையத்தினை தகர்த்த அந்த நொடி தோழியில்தான் நிகழ்ந்திருக்கிறது. ஆதலால் நினையாய் வாழி தோழி...
Post Top Ad
Friday, 20 July 2018
நினையாய் வாழி தோழி - சாஜித் அஹமட்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment