அன்று_நான் ஒரு கட்சியின் வேட்பாளர். - ULM.றுபைஸ். தொடர் - பகுதி-2 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

அன்று_நான் ஒரு கட்சியின் வேட்பாளர். - ULM.றுபைஸ். தொடர் - பகுதி-2


#அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்.
தொடர் - பகுதி-2


காலை பதினொரு மணி இருக்கும் விரலில் பூசிய மையை தடவிக்கொண்டு காதிரியா பாடசாலையின் பிரதான வாயிலாக வரும்போதே இறக்கிவிட்ட நன்பனை தொலைபேசியில் அழைத்தபோது மீன் வாங்க அவசரமா மார்கட் போய்ட்டன் எண்டான். சரி நடந்து போவோம் என்று வெட்கத்தை சிரிப்பால் மறைத்து வீதிகளில் நிட்கும் மக்களின் பல்லாயிரம் கேள்விகள் தோன்றும் முகத்துக்கும் எனது சிரிப்பையே பதிலாய்க் கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.
அன்று ஆரம்பித்த நடை.
ஒன்றாய் படித்தவனும், பழகியவனும், தெரிந்தவனும், தெரியாதவனும் ஏதோ என்னைப் பார்த்தால் ஏத்திக்கி போகச் சொல்வேனோ என்ற பயத்தில் மோட்டார் சைக்கிளின் சீட்டில் ஒருகால் தொடையில் மட்டும் அமர்ந்துகொண்டு கம்புக்கட்டுக்கு காத்துவர மொடங்கையை ஒயத்தி கழுத்து வலிக்காறன் போல அன்னாந்து பறப்பார்கள் உள் வீதியிலும் என்பதில்.
எனக்கும் தன்மானம் உண்டல்லவா பொருட்படுத்தாமல் நடையிலேயே எனது நாளாந்தக் கடமைகள் முடியும். இப்படியே ஒரு நாள் களைப்பில் வீடு வந்தபோது தேசிய காங்கிரஸின் டயரி ஒன்று எனது பெயர் எழுதப்பட்டு வீட்டுக்கு வந்து யாரோ கொடுத்தார்களாம் என்று எனது கையில் கிடைத்தபோது ஒரு சின்னச் சந்தோசம்தான் நம்மளையும் மதித்து அனுப்பிருக்காங்களே என்று அதுக்குப் பிறகு இருபது தாள் கொப்பியும் வராதது ஒரு பெருங்கதை அதை விடுவோம்.
என்னையாம் இவர் எலக்சன் கேட்டன்ன மாறின என்ன இப்ப கரண்டிக்கால் றவுசர் தேய நடந்து திரியிர என்ன என்ற என் வீதிப் பெண்களின் கேவலக் கதைகள் நாளடைவில் அனுதாபமாகவும் மாறியது. இசை மேடையில் தொகுத்து வழங்குவதும் பாடல் பாடுவதும் என்று திசைமாறிய பாதை மனவலிக்கு மருந்தாக அப்போது தோன்றியது.
என்னோடு அந்த நேரம் பாடகர் அரபாத்தும், எனது சகோதரர் நிப்றாசும் நெருக்கமாகப் பழகினார்கள். அதேபோல சில நண்பர்கள் என்னோடு பழகியதும் மறக்கமுடியாதுதான்.
அன்றுதான் ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு குழிப்போம் என்று ஆடை மாற்றும்போது நிப்றாசின் அழைப்பு வந்தது அக்கரைப்பற்று பிரதேச சபை திறப்பு விழாவாம் போறா என்று கேட்க.
ஆம் கட்டாயம் நான் தலைவருக்கு எழுதிய பாடலொன்று இருக்கிறது அதைக் கட்டாயம் பாடவேண்டும் என்று சென்று.
நிகழ்வை சிறுது நேரம் ரசித்துவிட்டு ராசிக் சேர்மனிடம் வந்து விடையத்தைச் சொன்னேன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி
சரி சரி கொஞ்சம் இருங்கோ என்று ஏழு முறைக்கு மேல் பதிலாகச் சொன்னார். பொது நிகழ்ச்சிகள் முடிந்து இசை நிகழ்வுக்காக நூறுல்லாஹ் குழுவினர் தயாராகும்போது தொகுத்து வழங்கிய பிஸ்ரின், மூக்குத்திட அனசிடம் சென்று ஒரு ஐந்து முறை கேட்டேன் கொஞ்சம் நில்லுங்கோ என்று சொல்லிவிட்டு இசையை ஆரம்பித்தவர்கள் மூன்று பாடல் முடிந்தபின் திரும்பவும் கேட்ட எனக்குச் சொன்னார்கள் இசை போகுது எலா எடையில கெரோக்கி போட ஏலா....
ஓ....சரி என்று திரும்பி ராசிக்கின் அருகில் இருந்த தலைவரை பார்த்துக்கொண்டு வீடு திரும்பிய நாங்கள் பாதையிலேயே படித்துத் தீர்த்தோம் எனது பாடலை.
நீ நடந்தால் நடையழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழழகு
நீ ஒருவன் தானழகு...
.....
நாம் பார்ப்பது எல்லாம் அட உன் முகம்தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தான.
அந்த வாண்மழை எல்லாம் இந்த பூமிக்குத் தானே
உம் வாலிபமல்லாம் எமதூருக்குத் தானே.
மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது உனக்கு மாலைகளணிந்துவிடு
இருக்கின்ற வரையில்
இறக்கின்ற வரையில் உயிருடன் கலந்துவிடு
உன்...சேவை அடங்காது ஊரும் இயங்காது. அழகு.........( அப்படியே தொடரும் பாடல்)
எனக்கு சந்தர்பம் தராத இவர்களுக்கு நான் யார் என்று காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் பாடல் வரிகள், இசை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்திலும் கால்பதித்து சாதித்தும் காட்டிவிட்டு ஹராமான இசையை விட்டு ஒதுங்கி இன்று இருந்தாலும்.
அன்று விளையாட்டுலெயே ஒரு வருடம் கடந்துவிட்டது. பாசித் காக்காட வெல்டிங் கடையில் சிலகாலம் செலவுப் பாட்டுக்கு  வேலை செய்துகொண்டு இருந்த நான் புகழ் லாபீரின் வீட்டுக்கு மேசன் வேலைக்கு மூன்று நாள் தொடர்ந்து போய் வரும்போது ஒரு வெள்ளிக் கிழமை  நன்பன்  பானிமின் ஊடாக ஒடாவி றபியத்துல் என்பவரின் சிநேகம் கிடைத்து எனது ரூபம் ஓடாவியாக உருவெடுத்தது.
அவரோடு இர்சாத்தும் நானும் சுபர் கப் சைக்கிளில்தான் போவோம்.
பழைய இஞ்சின் என்றாலும் ஜப்பான் இல்லையா இருந்தும் மெதுவாகவே நகரும் அது....
நகைச்சுவையாக...
ஓட ஓட ஓட தூரம் கொறயல பாடலோடு எங்கள் தொழில் பயணங்கள் தொடர்ந்தது.
ஞாபகம் வரும்போதும், கடும் யோசனை வரும்போதும் பல கட்டுப் பாட்டாளர்களின் நாடியைப் பிடித்து தலைவரை அடிக்கடி சந்திக்கும் போது அவருடைய பதில்.
ஓம் மகன் எனக்கு நெனப்பிருக்கு ஒன்ன லைபிறரில போட இருக்கன் கொஞ்சம் பொறு என்றுவிட்டு.
ஒருநாள் கூட்டத்தில் பீக்கர் கட்டியவனுக்கு கொழும்பில் தொழில் கொடுத்தது தெரிந்து உம்மாவோடும் போனேன்.
அன்றும் அதேதான் தலைவரின் பதில் (வாக்கு தந்துவிட்டு எதுவும் செய்யாத தலைவர்கள் மத்தியில் எத்தனையோ எமதூருக்குச் செய்த இவர் வாக்குத் தவறமாட்டார்)
என்பது எனக்குத் தெரிந்ததால் எனது நடை பவனி இரண்டரை வருடமாக நீண்டது.

www.gafslr.com

அடிக்கடி அஸ்ஸிறாஜ் பக்கம் போனா சைக்கிள் மேயர்ர ஊட்டு ரோட்டால போகத் தவறுவதில்லை அன்றொருனாள் மேயர்ர ஊட்டுச் சந்தியில் அவர் எங்களைக்கண்டு ஓடாவியார் றுபைஸ் நம்முட புள்ள ஒங்களோடையே வச்சுக்கோங்கொ இன்ஷா அல்லாஹ்.... என்று சொன்னதை நான் மறந்தாலும் றபியத்துல் ஓடாவியின் சுப்பர்கப் தன் மனதில் பதிய வைத்திருந்தது.
தொடரும்...
இன்னும் சுவாரசியமாக இருக்கும் அடுத்த தொடர்கள்.
Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages