அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். - ULM.றுபைஸ் - தொடர் - பகுதி-3 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். - ULM.றுபைஸ் - தொடர் - பகுதி-3

அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர்.
தொடர்-3


திடீர் என்று ஓர் தொலைபேசி அழைப்பு சக்கி காக்கா அதாவது நமது மேயர் சகி என்ன சேர் ஹா றுபைஸ் கொஞ்சம் ஒபீசடிய வாங்கோ சேர் நான் கட்டார் போக எல்லாம் ரெடியாகிட்டு இன்னோம் ஐந்து நாள்ள வீசா வந்துடும் அது வேலையா போகப்போறன்.
சரி கொஞ்சம் வந்து போங்களன்.

துண்டித்துவிட்டு எதில் போறது என்று யோசித்த நான்  சரி யாரையாலும் பாத்துப் போகலாம் எண்டு வீதி முழுக்கப் பாத்துப் பாத்து  சபை வந்துவிட்டது. அப்படியே புழுதி பட்ட காலை கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்தபோது என்னிடம் மேயர் கொடுத்த விண்ணப்பப் படிவம் கையிலிருக்க அவரைப் பார்த்தேன்.
நிறப்பித் தாங்கோ வேலை சரியாகிட்டு கிடைக்கும் என்றவுடன் நான் பட்ட எல்லா அவமானங்களும் கஷ்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து தூரத்தில் நின்று வெட்கித்து தலை குனிந்து நிட்பது போல உணர்வுடன் இருக்கும்போதே சில நாட்களில் வேலையும் கிடைத்துவிட்டது.

முதல் மூன்று நாட்களும் கையொப்பத்தோடு திரிந்த எங்களை ஒவ்வொரு பிரிவுகளாக நியமித்தார்கள். வேலை கிடைத்த நாப்பத்தி ரெண்டு பேரும் அவரவர் பிரிவுகளில் பணி செய்தோம்.
எல்லாத் தரப்பிலும் எல்லாவிதமான ஆட்கள் இருந்தாலும் வேட்பாளராக வேறு கட்சியில் கேட்டு மாறி இன்று அரச தொழிலில் இருக்கும் என்னை ஒருவிதமாக சக ஊழியர்கள் பார்த்தாலும் நான் பணி செய்யும் இடத்தைப் பார்த்து திருப்தி கொண்டார்கள்.

உயர்ந்த மாநகரத்தில் அந்த வட்டமான வாகனத்தரிப்பிடத்தில் எனது பணி ஆகா பிரமாதம் காலையில் வெள்ளை ஆடையில் வீட்டிலிருந்து வரும்போது றவுசருக்க சேட்ட உட்டு ஆபிசர் போல வந்து சபைக்குள் நுழையும்போது மீண்டும் வெளியில் உட்டு முதல் வேலையாக கையொப்பமிட்டு பின் நாய்களிட்ட கையொப்பங்களை குமட்டலுடன் அள்ளிக் கழுவிவிட்டு வாகனங்கள் வந்துபோன டயர்கள் போட்ட மணல் சித்திரங்களை ஒன்றாய்க்கூட்டித் தள்ளிவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொள்வேன்.

வந்தவர்கள் சைக்கிள்களை நேர்த்தியாக்குவதும் போகும்போது மீண்டும் தள்ளிக் கொடுப்பது பிடித்த (பணி) பனி வேர்வைகள் முகத்திலிருந்து துடைத்தவனாக சீமாவில் காலச்சாப்பாடு கடனுக்கு. இப்படி நகர்ந்த நாட்களில் ஒருநாள் வந்த நிலாங்காக்காவிடம் போய்.

 காக்கா நான் இவடத்த வேல செய்யிரது கஷ்ட்டமாயிருக்கு மத்தாக்களப்போல வந்தா பரவால்ல ஆனா நான் எலக்சன் கேட்ட ஆள். இந்த நெலமைல ஆக்கள் பாத்தா தலைவருக்குப் பொள அவர் எனக்கு லைபிரரில தாறன் எண்ட கொஞ்சம் சொல்லுவயலா...?
ஓம் மகன் கட்டாயம் எண்டுபோட்டு மேயரச் சந்திக்க போய்ட்டார் அவர் உள்ளுக்கு.
அவர்ர சைக்கிளத் தள்ளும்போதுதாதான் நினைவில் சவுதி போனது வந்தது.

வயது போதாது என்று இருவதாயிரம் மேலதிகமா வாங்கி கள்ள பாஸ்போட் செஞ்சி ஒன்னரலெச்சமும் வாங்கி ஒப்பீஸ் போbய் எண்டு சவுதிக்கி அனுப்ப அது றோட்டு போற கம்பனி என்னையும் போகச்சோல்ல இப்பயே இருவது வயசுபோல இருக்கிற நான் பதினேழு வயசுல எப்படி இருந்திருப்பன்.
நிலாங்காக்காக்கிட்ட கெஞ்சியது போல அங்க இந்தியா சரீப்  நானாக்கிட்ட கெஞ்சி அவரும் கபீல் கிட்டக் கதச்சி ஒருவழியாக ஒபீஸ் போbய் கிடைக்க அறுநூறு றியால் போதாத சம்பளத்தில் வேலை செய்து பிடிக்காமல் ஆறு மாத்தையால அதவுட்டுப் பாஞ்சி றியாத் நஷிமுல ஒரு கோப்பி சோப்புல ஒரு வருசம் வேல செஞ்சி கடன முடிச்சுப்போட்டு ஜித்தா போவோம் எண்டுபோட்டு கூட்டாளி யாசிரோட சப்கோ பஸ்சில் போனபோதுதான் தாஹிப்புல வச்சு புடிச்சான் போலிஸ்.

அந்த ஜெயில்லேயே முப்பது நாள். சொபின் பேக் பீங்கானில் சோறு பழைய போத்தலில் தண்ணீர் படுக்க ஒரு மூலை அங்குதான் அவனைக் கண்டேன் உடல் முளுக்க அம்மாள்  காய்ச்சல் வேறு அவனுக்கு.
 சாக்கால் போர்த்திக்கொண்டு முனுகிக்கோண்டிருந்தவன் அருகில் போகும்போது தடுத்த மத்த சிறீலங்கனிடம் ஏன் எண்டு கேட்டன்.
அவனுக்கு அம்மாள் தொத்திடும் பறவால்ல பாவம் அவன் எண்டு அவனை அழைத்துப் போய் குளிக்க வைத்து ஆடை மாற்றி தண்ணீயோதி அவண்ட மொகத்த கழுவிப்போட்டு பேரன்ன எவடம் எண்டு கேட்டன் சிறிலங்காதான் கிண்ணியா.

ஆறு நாள்ள குணமாணவனோடச் சேத்து என்னையும் பஸ்ஸுல ஏத்தியனுப்பி றியாத் ஜெயில்ல போட்டாங்க. அறுபது பேர் தாங்கக்கூடிய அறையில் நூத்திப் பத்துப் பேர். காலுக்கு காலைக் காட்டி தலைகளை எதிர்த்திசையில் வைத்து என்னுடைய காலொன்று அவன் கால்களுக்கிடையிலும் அவன் கால் என் இரண்டு கல்களுக்கிடையிலும் எண்டு பின்னிப் பிணைந்த படுக்கையும். எப்போது மத்தவன் கால மடக்குவான் நாம நீட்டுவோம் எண்டு எதிர்பார்த்து சிலரும், டொய்லட் போறண்டா ரெண்டு மணித்தியாலங்களுக்கு முந்திப்போய் காத்திருக்கும் சிலதும், எனது தலைமாட்டில் வடிந்து வந்த கக்கூஸ் தண்ணீ தலையில் படாமல் தண்ணீ போத்தல் ரெண்டுல சேட்டச் சுத்தி தலைய வச்சுப் படுத்தொழும்பிக்கி இருக்கோக்கொள்ள  எட்டுப் பேருக்குச் சேத்து ஒரு சகன் படி வாற சோத்த கையொண்ட ஓட்டி ஒரு புடிய அள்ளி அறவே காணாமச் சாப்புட்டுப்போட்டு.

அவிச்சுப் போட்ட அந்த வள்ளலக் கறி இலையையும், நாய் இழுத்துத் திரிஞ்சு நாறிக்கிடக்குமே சவ்வு வீதிகள்ள அதப்போல  கொஞ்சம் சஹனுல அவிச்சு வச்சத எறச்சத் தேடி பிச்சித் திண்டு மிச்சத்த வீசிப்போட்டு வயித்து வலியோட யோசிச்சிக்கு அந்த டொய்லட்டுல பத்து நாளு.
#வந்தது_எனக்கும்_அம்மாளு.

ஓடி வந்த அஸ்கிரி ஜவாசத் ( ஜெயில் காட்)
என்னக் கொண்டுபோய் தனி றூமுல அடச்சிப்போட்டு அவண்ட பாட்டுல பெய்த்தான். சவுதியில் அன்னரம் சூடுகாலம் ஏசியப் போட்டா அதுலயும் சூடுவர ஓபண்ணிப்போட்டு அங்கபாத்தா எனக்கு முந்தி வந்தவன் திண்டுபோட்டு போட்ட சோத்துப் பாரிசல் புழுத்துவடிய ஓரத்துல தள்ளி வச்சுட்டு சூடு தாங்க ஏலாம தொறப்பால வெட்டியடுத்த தண்ணீ போத்தல்ல தண்ணீய எடுத்து றூமக் கழுவிப்போட்டு.
அப்பப்போ சூட்டத் தனிக்க உடல் முளுக்க தண்ணிய ஊத்தீ உள்ளாடையுடன் ஈரம் காய்வதுக்குள் சாரனால போத்திக்கு சொட்டுச் சொட்டு தூங்கி ஒழும்பிக்கி இருந்த என்ன.
அம்மாளுக்கே தாங்கலையோ அப்படியே ஓடிப்போச்சு.
குடித்தது குளித்தது எல்லாம் அதே போத்தல்

இரண்டு மாதம் முடிந்துவிட்டது என்னை நாட்டுக்கு அனுப்ப மீண்டும் இரும்புக் கம்பிகளால் அடைத்த அந்த பஸ்ஸில ஏத்தும் போதே என்னைப் பார்க்க வந்த நண்பன் யாசீரின் கண்ணீரோடு புறப்பட்டு நாடு வந்த நான் தக்காவடியில் எறங்கி வீடு நோக்கி நடந்தபோது.
சந்துல தட்டி போகத்தான் எறங்குங்கோ மகன் என்ற நிலாங்காக்காட சைக்கிள உட்டுப்போட்டு சீமா ஹோட்டலுக்கு புறப்பட்டேன் டீயொண்டு அடிக்க.
தொடரும்.
Gaf Rufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages