பொண்டாட்டி தாசன் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

பொண்டாட்டி தாசன்

பொண்டாட்டி தாசன்
***********************

அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
ஆமென்று  தான்சொல்வான்
அடுத்தகணம் இல்லையென்பான்
ஏனென்று  நாம்கேட்டால்
இல்லத்தாள் ஆணையென்பான்
யாரென்று தானவனை
ஏசிநாம் விரட்டுவது
தான் கொண்ட மனைவியது
தர்பார்அதை என்னசெய்ய

வேண்டுமென்று  தான்வருவான்
வினாடியானால்...
வேண்டாமே அதுவென்பான்
தான்டவே மாட்டான்படி
தாரத்தின் ஆணைப்படி
ஆம்
தேவையும் வெறுப்புமங்கே
திருமதியின் தீர்மானந்தான்

கூட்டல் கழித்தல் எல்லாம்
குடும்பத் தலைவியால்தான்
பாவம் அவன்மேல் நாமும்
பழி போடல் நியாயமில்லை
கோபம் கொண்டவனை
குறைப்படவும் தேவையில்லை

கட்டியவள் முந்நிலையில்
கருத்தெல்லாம் நாறுவதால்
கண்பொத்தி விழிப்பதற்குள்
காரியங்கள் மாறிவிடும்
பொன்புத்திதான் அந்த
பொம்பிளையின் புத்தியென்று
பின்பற்றப் பழகிவிட்டான்
பிறகென்ன சொல்ல உண்டு

கொண்டாடுகின்றான்
குடும்பத் தலைவியென்று
மன்றாடுகின்றான்
மனைவியிடம் அனைத்துக்கும்
திண்டாடுகின்றான்
தீர்மானம்  எடுக்கவொண்ணா
பொண்டாட்டி தாசன்தான்
புதுமை யில்லை
பொறுமை கொள்வோம்

அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages