ஏறு வெயில்
யாரும் தன்னை இழந்து ரசித்துக் கிடந்தாலும்
காண வெறுத்து நச்சரித்தாலும்
என்றைக்கும் புள்ளி வைய்த்த கோலமே
வானில் " மொடன் " ஓவியம் வரைந்திட
யாரால்தான் முடியுமென்று விவாதித்துக் கிடந்தாலும்
ஊன்றி அழித்துவரும் வெயில்
நிழல் தேடாமல்
பூத்துக் குலுங்கும் ஒரு கிளையுள்
ஓடிப்போய் ஒதுங்கிக் கொள்ளாமல்
ஒளியாய் சந்தனம் குழைத்து காலைத்தடவும்
மதியம் தீ குளைத்து அப்பும்
மேற்குக் கடலில்
சந்தனத்தினதும். தீக்குழம்பினதும் சட்டிகழுவ
உச்சந்தலையில் " ஜ.சி. ஈ" வைக்கும் பின்னேரம்
நிமிஷங்களின் மீதேறிப் பறந்து
தாவரங்களில் பொன்தடவி துள்ளிமினுங்கி
மேகவண்டிகளில் தாவித்தாவி தவண்டு
எப்படிப் போயினும்
பன்னிரண்டு நேரத்தில் கடத்திடும் பகலை வெயில்
ஆசையாய் வளர்த்த பறவை பறந்தபிறகு
உதிர்ந்து கிடக்கும் சிறகுகள் மீது வருமே
அதிகமான நேசம்
அதுபோன்றே வெயிலில் மீதும் எனக்கு
மரங்களைத் தாண்டி
முள்வேலியில் சிக்கி குத்துப்பட்டு
ஜன்னல் இடுக்குகளால் நுழைந்து
முதுகைச் சொறண்டிச் சொறண்டி எழுப்பிவிடும்
வெறுப்பும் வரும் சிலநாளிள்
காத்திருப்பேன் நிழலாட்டம் ஆடிட
குதிகாலால் என் நிழலின் தலை தொட
நடப்பேன் - ஓடுவேன் - துள்ளிப்பாய்வேன்
நிழலும் செய்யும் அப்படியே
பிடிப்பேன் அந்தப் பகலுக்குள் மீண்டும் தப்பிடுமே நிழல்.....
எனக்குள் பரந்து கிடக்கும் என்னை
பிரபஞ்சத்துள் செலுத்தி அனுபவிக்கும்
நுட்பம் தந்தது வெயிலே
நேசிப்பேன் இனியும்
போய்
ஆற்றலாய் கிடக்கும் நதிக்கரையில்
அணியாய் பொங்கி வந்து
ஒன்றாய் பின் ஒன்றாக ஒழியும் அலைகள் வரண்டு
பாதம் கொப்பளிக்க எரியும்
மணல் திட்டாய் மாறுகையிலும்
செல்லமாய் கோதித்தடவிடும்
புற்கள்
வாடிக் கருகையிலுமே அவதி
வெயிலின் மீது சொல்லொண்ணாத எரிச்சல்
மஜீத்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment