14.07.2016
வாழ்தல் என்பது நடுநிசியில் கனவிலிருந்து ரசிப்பது போல, உயிர் அழகிப்போவது காலையில் எழுந்தபின்தான் உயிரியிருப்பதாகிட்டு
தலை தரை கீழ்நிற்கிறது ஏதோ கண்காணா தேசத்தில் நின்று உயிரின் துடிப்பைச் செவியுறுவது போலவும் ஆகிற்று. அந்த நதியில் ஒருவன் மூழ்கிறான், கிண்ணக்குழிக்குள் இறக்கவில்லை நடுங்கிக் கொண்டிருக்கும் உடலுள் கனகாலத்து யுகங்களில் உடைவதைக்குள்ளே
காலத்தின் கொடூரங்களுள் கீழ்நோக்கி பகுதி பகுதியாக விரிசிறகுகள் சறுக்கவுமாகிட்டு, அசைவற்று மிதக்கிறது காலமும் மரணச் சுழிப்பிடை ஒரு காறுண்ட இருட்டை சவக்குழி பாதைக்குள் தன்சிறகுகளை விரிக்கலாம், விரிந்து பறந்து வான முகட்டுக்குள்ளே புகுந்து நிலத்தின் பின்முனையிலிருந்து வர்ணங்கள் புள்ளிகளாக்கி நிறத்தை மாற்றியும்விட்டது பட்டாம்பூச்சிகள் அந்த நீலவானத்தில் நட்சத்திர குவியல்கள். அதன்மேல் எரிபடிகளாகி விடுங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறது வாழ்வை புரியாது அழகை எங்குதேடி காணமுடியும்.
என் தலைக்குள் நிழல்கள் இழுக்கப்படுகின்றன. மெதுவாக ஊர்ந்து சென்று மகிழ உடல் இடம் தரவில்லை. நள்ளிரவில் நீர்மேல் நீ தனியாய் இருண்டதங்கு கூட விலகி செல்கிறது இருண்ட கரையை பித்துப்பிடித்து இரவில் நீந்துகிறேன்.
கருமுதுகுக் கடற்பறவைகள் அதற்கடியில் அகண்ட நீர்பரப்பு அன் நீரில் முதுகில் நீரில் ஒ ருவர்ண கல்லைப்போல் புரான ஓவியத்திலிருந்து வந்த இன்னும் ஒரு அழகிய பறவைகள் நீந்துகின்றன.
புற்களும் மலர்களும் நிறக்குருட்டு நேரத்தில் யாமமாகிவிட்டது. ஈயநிறத்தில் மினுங்கும் நீர்ப்பறப்பில் விரிவில் மின்னிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று உள்பாய்ந்து சுடர்கிறது.
ஒளியூடுருவும் ஒன்றாய் என் தலையில், எழுதப்பட்டிருந்தது தொலைதூரம் சென்றாகவேண்டும் நானும் வனத்திடைநெடு நேரம் நடக்க வேண்டும் இருளை ஒளிரச்செய்ய இயலும் பார்வையால் இதுதான் மொத்த தேசத்திற்கானநாள்.
மஜீத்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment