கருங்கொடித்தீவும்
கவித்தெருக்களும்
அந்தி அவள்
வேட்கித்து வருவாள்
சந்நிகள் விம்மி
பல் இழித்து நிற்கும்!
சிரிப்பின் உச்சத்தில்
வாலிப இரத்தங்கள்
சூடேறிக் கொதிக்கும்!
இடைகளை வருடும்
கூந்தல் மயிரில்
சின்ன இதயங்கள்
தொங்கிக் கிடக்கும்!
மார்பை உரசும்
வர்ணச் "சோல்" களில்
கடிதம் எழுத
மனசுகள் துடிக்கும்
வயசுகளின்
பாவை இடுக்கில்
அழகு முழுவதும்
வழுகிக் கிடக்கும்
ஜன்னல்கள் திறந்து
கவிதைகள் பேசும்
நிலவுகள் இங்கே
மெலிந்து கிடக்கும்
மஜீத்
Post Top Ad
Wednesday, 25 July 2018
கருங்கொடித்தீவும் கவித்தெருக்களும் - மஜீத்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment