மறவன்புலவு சச்சிதானந்தத்தின் இந்துத்துவா கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

மறவன்புலவு சச்சிதானந்தத்தின் இந்துத்துவா கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்

மறவன்புலவு சச்சிதானந்தத்தின் இந்துத்துவா கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிவசேனையை இங்கு இறக்குமதி செய்து கொண்டு கொக்கரிக்கும் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் முஸ்லிம் விரோத, இனவாதக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்போது பகிரப்படும் அவரது காணொளி இந்துத்துவா சக்திகளின் நீட்சியேயன்றி வேறல்ல. இலங்கை முஸ்லிம்களை நோக்கி காய் நகர்த்தும் இந்த இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் குறித்து நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும். கடந்த காலங்களிலும் இது குறித்து நான் எழுதியுள்ளேன்.

2009 இல் சென்னையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகள் குறித்து நான் உரையாற்றினேன். 

அதன் நிறைவில் இடம்பெற்ற கேள்வி-பதிலின்போது, பார்வையாளராக வந்திருந்த மறவன்புலவு சச்சிதானந்தம் எழுந்து தாறுமாறாகக் கருத்துக்களை முன்வைத்தார். கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது, எனக்கும் அவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. அது இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. இதற்கு அ.மார்க்ஸ் நேரடி சாட்சி.

இப்படியான முட்டாள்தனமான கருத்துக்களால் முஸ்லிம்களையும் அவர்களது பூர்வீகத்தையும் கொச்சைப்படுத்த நினைப்பது மிக மோசமான அரசியலாகும். இது போன்ற நச்சுக் கருத்துகளை வளர விடுவது, சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை ஆழமாகப் பாதிக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages