அதற்கிடையில் அன்றைய அடிப்பாட்டிக் கலாச்சாரம் முடிவின் இறுதிக்கட்டத்தில் இருந்தது அவர்கள் எனக்கு அடிக்கப்போவதாகவும் ஒரு தகவல் கிடைத்தது.
ஊர் முழுக்க கதை பரவியது அதாவின் ஆட்கள் றுபைஸை கடத்திவிட்டார்கள் என்றும், பயத்தில் ஓடி ஒளித்துவிட்டார் என்றும். ஆனால் தலைவரோடு செல்லும் ஒவ்வொரு கட்சிக் கூட்டங்களிலும் அதற்கான தெளிவும், கட்சி மாறியதன் காரணமும் என்னால் முன்வைக்கப்பட்டது.
அதுவும் இத்தனை நாளும் தலைவருக்குப் பின்னால் வரும் வாகனத்தில் கெத்தா போய் ஒவ்வொரு கூட்டங்களிலும் இறங்கிய எனது உணர்வு அன்றைய தினம்தான் அது அவசியமானது.
என்ன செய்வது உம்மாவோடு வீடுவரை ஆட்டோவில் சென்று. நண்பனோடு வாக்குச் சாவடி சென்று வாக்கு குதிரைக்கும் இலக்கம் ஒன்றிற்கும் என்னால் இடப்பட்டது.
No comments:
Post a Comment