பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கியது.
இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.
இதன் மூலம் சர்வதேச தடகள கழகத்தின், ஜூனியர் மட்டத்திலான, சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 18 வயது ஆகும்.
இதற்கு முன் 2002 ல் சீமா புனியா மற்றும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லான் ஆகியோர் இதுபோன்ற தொடரில் இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
ஆனால், இதுபோன்ற சாதனைகளையெல்லாம் விட்டுவிட்டு, ஹிமா தாஸ் என்ன ஜாதி என்பதை இந்திய நெட்டிசன்களில் பலரும் கூகுளில் தேடி பார்த்துள்ளனர்.
Hima Das என்று கூகுளில் டைப் செய்தாலே, அதிகப்படியாக மக்கள் தேடிய விஷயம் பரிந்துரையாக காண்பிக்கப்படும். அதில் ஹிமா தாஸ் ஜாதி என்பதுதான் டாப்பில் உள்ளது.
அதன்பிறகுதான் அவர் இன்டர்வியூ, அவர் தங்க பதக்கம் வென்றது போன்ற கேள்விகள் இடம் பிடித்துள்ளன. இந்திய சமூகம் எந்த அளவுக்கு ஜாதி சார்ந்ததாக உள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து வெள்ளி வென்றபோதும், அவரது ஜாதியை அதிகம் பேர் கூகுளில் தேடியிருந்தனர்.
No comments:
Post a Comment