அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர்.
- தொடர் 08.
எப்படியும் எனக்கு முன்னாடி எழும்பும் வாப்பா அன்றும் நான் வெளியாகும்போது சைக்கிளில் இறந்து உடைந்து தொங்கிய மட்காட்டின் துண்டை மேலும் கீழும் மடைக்கி உடைத்து வீசிவிட்டுக் கேட்டார்.
மகன் நானும் கூலித்தொழிலாளி தானடா எனக்கும் ஒரு சைக்கல் தந்தா வீசப்போகலாம் இந்த சைக்கல் என்னேரமும் காத்துப்போகுது நீ அங்கான வேல செய்றாய் எனக்கும் ஒரு சைக்கல் தரச்சொல்லன்.
இல்ல வாப்பா அது நம்மளுக்கு இல்ல சைக்கல் எடுக்க வந்தாக்கள் எல்லாம் பbடியிலையும் ஆட்டோவுலையும் எடுத்துப் போனாங்க.
வெள்ள சாரன் சேட் போட்டு வந்தாங்க கட்சிக்கு பாடுபட்ட ஆக்களாம்.
அதுவும் காசு சொத்து அதிகமா இருக்கனும் போல நீங்க அப்டி இல்ல வாப்பா சைக்கல தள்ளுக்கித்தான் போவயல் பbடியில எடுத்து போகமாட்டியல்.
சரி நேரம் பெய்த்து வாரன் எண்டு பெய்த்தன் வேலக்கி.
அடுத்தநாள் இரவுக் கடமை என்பதால் ராத்தாவின் வீட்டில் கட்டிவந்த சோற்றுப் பார்சல வச்சிட்டு கொடி ஏத்தும் கம்பத்தின் அடியில் உக்கார்ந்து நானும் சிலரும் பேசிக்கு இருந்தம்.
என்ன நியாயம் இது ஏழைகளுக்கு கொடுக்காம இந்த சைக்கல ஏன் இப்படி கொடுத்தாங்க என்று ஒருவர் சொல்ல மத்தவர் நாலஞ்சு இல்லாதவனுக்கும் கொடுத்த தான.
ஓம் கட்சிக்கு பாடுபட்டவன உட்டுபோட்டு சும்மா வாறவன் போறவனுக்கு கொடுக்க என்ன லூசா...?
அத்தான எண்டு தொடரும் உரையில் எப்படியும் ரொசான் வராமல் போவதில்லை அவரையும் சில நேரன் கழுவிக் குடித்துவிட்டு.
கார்ட்போட் மட்டைய விரிச்சி அண்டு நான் புதுசா போனத்தால ஹாஜா பாய்ட நெழும்பு வலைய விரிச்சிக்கு படுத்திட்டன்.
அதிலிருந்து சில நாட்களில் கூட்டம் ஒண்டக் கூட்டி மேயர் பேசும்போது றுபைஸ எங்க போட்டாலும் மாற்றம் ஒண்டச் செய்வார் அவர முறாவோடைப் பார்க்குக்கு போடுவோம் எண்டு எனது சம்மதத்தையும் முனைந்து எடுத்து போட்டார்கள் பகல் நேரக் கடமை போனேன்.
சரளமாக கஞ்சாவும் கீழ் பக்கம் சாராயமும் என்று ஒரு போதை மயமாக இருந்த அந்த இடம் என்னையும் மாற்ற முயன்றபோதும் முடிந்த அளவு தப்பித்துக் கொண்டேன்.
வரும் இளைஞர்களிடம் அன்பாகப் பேசி ஒரு எல்லைக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தும்படி கூறி நிறுத்தப்பட்டது ஒத்துழைப்பு தந்தார்கள்.
நான் கடமை புரிவதால் இருக்க ஒரு இருப்பிடம் தேடி ஏலாம தம்பிக்காக்காக்கு கோல் அடிச்சு எவடத்த காக்கா இருக்கிற எண்டு கேட்டன்.
றுபைஸ் அந்த கட்டுல இருங்கோ இல்லாட்டி ஒரு மட்டையப் போட்டு கீழ இருங்கோ எண்டார் சரி காக்கா எண்டுபோட்டு.
காரியாலயம் வந்து ஜெயேந்திரன் சேர்கிட்ட கதச்சி குப்ப ஏத்தற மிசினில மேசையும் மூணு கதுரையும் கொண்டுபோய் போட்டு அங்குள்ள ஒரு அறையைக் காரியாலயம் ஆக்கி உக்காந்துகொண்டேன்.
இனி என்ன
மீதமுள்ள நேரம் எல்லாம் புத்தகம் படிப்பதும் மாஹிர் வந்தால் திரைப்பட உரையாடல், பாடல் எழுதுவது என்று நீடித்த பணியில்.
ஒருநாள் வந்தார் ரொசான் cc,யும், ஹமீட்டும்.
சுற்றிப் பார்த்தார்கள் பேசினார்கள் போவதர்க்கு முன் ஹமீட்டிடம் கூப்பிட்டுச் சொன்னேன் காக்கா நாளைக்கு என்ன மாத்துவாங்க பாருங்கோ எண்டன்.
ஏன் எண்டு கேட்டார்.
இல்ல நான் இப்ப மேச கதுர போட்டு இருக்கன் தான ரொசான் சேர் பாத்துட்டார் இனி மாத்துப்படும் பாருங்கோ எண்டன் சிரிச்சிட்டு பெய்தார்.
அடுத்தநாள் சைன் வக்க ஒபீஸ் போனன் பார்க்குக்கு போகொன்னாதாம் நிக்கட்டாம் எண்டாங்க சரி எண்டு நிண்டன் வந்த ரொசான் சேர் சொன்னார் றுபைஸ் ஒங்கள ஐந்தாம் கட்ட யாட்டுல போட்டிருக்கு போங்கோ எண்டார்.
குப்பை மேடு என்றாலும் இயற்கை இடம் போனேன் நாத்தம்தான் என்ன செய்வது சில மனித இதையத்தின் நாத்தத்தைவிட மனிதக் கழிவின் நாத்தம் அவ்வளவு அருவருப்பாக எனக்குப் படவில்லை.
கொம்போஸ் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் விற்பனை செய்யவேண்டும் என்று முயற்சி செய்யும்போதே மூன்று நாளும் ஆகல்ல திரும்ப பஸ் ஸ்டாண்டில் வாச்சர் மற்றும் கொம்போஸ் விற்பனை செய்ய போட்டார்கள்.
கலகலப்பான இடம் அப்பப்போ ஒண்டு ரெண்டு பக்கட் விற்பனை மேலே பூட்டியுள்ள பெரும் அறை இரண்டையும் பார்த்து மனம் பத்தி என்ன இது கோலம்...?
புறாப் பீயும் பியர் பாட்டிலும் அதா நினைத்த அபிவிருத்தியா இது மக்கள் சொத்து இப்படி வீணாகிறதே என்று நினைத்தவாறே.
சில மேலதிக கல்வி நிறுவனமாகவும், யோகா நிலையமாகவும், சிறுவர் விளையாட்டு பாவனைப் பொருட்கள் விற்கும் கடையாகவும் கற்பனை செய்துவிட்டு கீழ் வந்து அமர்ந்துகொள்வேன்.
ஒருநாள்.....
சுகாதாரப் பிரிவின் பொறுபதிகாரியாகக் கடமை புரிந்த வைத்தியர் ரொமான்ஸ் அவர்களிடம் வந்து.
கொம்போஸ் விற்பனையை அதிகரிப்போம், விளம்பரம் செய்வோம், வீடுவீடாக இதன் அனுகூலங்கள் பற்றி விழிப்புணர்வு செய்வோம் என்று நான் கூற அவரு ஏற்று உங்களை போன்றவர்தான் என் பிரிவுக்கு வேண்டும் என்று எனக்கு ஒரு மேசை கதுரை அவருடைய பிரிவில் கொடுத்து கணணியும் கொடுக்கும்படி நௌபிரிடம் சொல்லி சில நாட்களில் வைத்தியரும் இடமாற்றம் நானும் இடமாற்றம்.
மீண்டும் நூலக நனசல செண்டரில் வேலை.....
ஆஹா மூன்று கணணிகள் புழுதி பிடித்ததைப் பார்த்த நான் அதை ஒழுங்குபடுத்தி சில மாணவர்களை இணைத்து அதில் இணையபயன்பாடு மற்றும் ஆங்கில கற்கை நெறி தயாரித்து எப்படி மாணவர்கள் பயனடையும் என்றும் சபைக்கு கிடைக்கும் லாபம் வெரைக்கும் ஒரு திட்டத்தை ஆவணமாகத் தயாரித்து மூன்று பிரதிகள் எடுத்து.
இஞ்சினியரிடம் ஒண்டக் கொடுத்தன் அவர் சில மழுப்பல சொல்லி திரும்ப என்னிடமே தந்துட்டார். கொமிஸினர்கிட்ட கொடுத்தன் வாசிக்கையும் இல்ல மத்தது எண்ட வீட்ட மருமகன் கிளிச்சி விளையாடியதாக ஞாபகம்.
என்ன செய்வது சுகாதாரத் தொழிலாளி சொல்லுவதை எப்படி அங்கீகரிப்பது.
அவர்களுக்குத் தெரியாது எங்களுக்கு கிடைத்த நியமனம் அப்படியண்றாலும் எங்கள் தகுதி அப்படியானது அல்ல வேறன்று....
தொடரும்
Post Top Ad
Sunday, 2 September 2018
அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர் - தொடர்_08
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment