அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். தொடர் - 09 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 9 September 2018

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். தொடர் - 09

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர்.
 தொடர் - 09

சுகாதாரத் தொழிலாளி நியமனங்களும், வீதித் தொழிலாளி, கெயாடேக்கர், என்ற பிரிவுகளில் தொழில் நியமனங்கள் பெற்று வேலை செய்யும் பணியாளர்கள் தங்களுக்குள்ளே தாழ்வுச் சிக்கலோடும் கூனிக் குறுகியும் தங்கள் திறமைகள் கல்வி நிலைகளுக்கப்பாலும் இந்தத் தொழிலை தலைவர் தந்துவிட்டார் என்ற மன உளைச்சலிலும், விசுவாசத்திலும் வேலை செய்தாலும்.
நியமனங்கள் சொல்லும் பிரிவுகளில் வேலை செய்ய விடாமல் அவரவருக்கு பொருந்தும் பொருந்தாத வேறு வேலைகளுக்கே பணிக்கு நியமித்து வறுத்தெடுத்தார்கள்.
என்னை விட்டால் போதும் என்று அக்ரம் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடியே விட்டான்.

வீட்டிலிருந்து வேலைக்காக புறப்படும்போதே சுயமரியாதை, சுய சிந்தனை எல்லாவற்றையும் வீட்டிலேயே களைந்து வைத்துவிட்டு. பணியிலிருந்து வீடு திரும்பும் போது தன்மானத்தை பணியிடத்தில் களைந்துவிட்டுத்தான் வருவார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல  சுழன்று வந்த பணி இடமாற்றங்களில் மீண்டும் மீராநகர் நூலகத்தை எல்லோரும் சேர்ந்து மீராநகர் முறாவோடைப் பார்க்கில் மாத்தி என்னை நியமிக்க மீண்டும் பத்திரிகைகளோடு தொடர்ந்தது பணி.

இடைக்கிட கையில் சில பத்திரிகைகளோடு சவாயிர் காக்கா வந்தாலே அன்றைய நாள் இன்னும் நீளாதா என்று எண்ணும் அளவிற்கு அவருடை உரையாடல்கள் அவ்வளவு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். கூட அரபாத்தும் வந்தா சொல்லவா வேணும். 

மாலை ஐந்து மணி இருக்கும் வீட்டடிய போறன் என்னோடு படித்த நண்பர் ஒருவர் நிக்கார் கடவலடிய காத்துக்கு.
 ஏதோ ஒரு அவசர வேலையா வீட்ட வந்த நானும் எண்ட 150கறுத்த பல்சர் சைக்கிள சைட் ஸ்டாண்ட்ல வச்சிட்டு அவர் பக்கத்துல போய் என்னடா எண்டன்.

X_நண்பர்....
X_ .....றுபைஸ் எனக்கும் மிலாவுக்கும் நாளைக்குக் கல்யாணம் நீங்க அவவ லவ் பன்னினாம் என்று சொன்னா அவ எல்லாத்தையும்.
மத்தது உங்களுக்கிட்ட அவட போட்டோ கொஞ்சம் இருக்காம் கல்யாணத்தண்டைக்கு கொண்டுவந்து பிரச்சினப் படுத்துவயலாம் எங்காள் மிலா. நானும் ரெண்டு மூணு போட்டோ தாறன் கொண்டு வாங்கோ சரியா என்று அண்ணாமலை றஜினி றேஞ்சில பேசினார்.

நாம என்ன சும்மாவா விர்ர கடும் கோவத்துல ஏசக்கயே சிரிச்சிக்குத்தான கதக்கிற பழக்கம் எனக்கு. அதே பணியில் சிரிச்சிக்கே சொன்னன் டேய்_x_ கக்கூஸ் போய் வந்து பbக்குக்க போன பீயப்பத்தி நான் யோசிக்கிறல்லடா எனக்கு அதுக்கு டைமும் இல்ல சரி ஏலுமண்டா கல்யாணத்துக்கு வாரன் இப்ப கொஞ்சம் அவசரம் பொறகு சந்திப்போம் என்று...

அன்று இரவு மாப்பிள்ளை xன் வீட்ட போய் குதூகலமாக சிரிச்சிப் பேசிவிட்டு வந்துட்டன் என்ன இருந்தாலும் கூடப் படிச்சவன் தான.

திருமணம் முடிந்த அந்த இரவு என் காதல் விடையங்கள் தெரிந்த சாஜித் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களும் விட்ட வந்தாங்க எனக்கு ஆறுதல் நிறையச் சொன்னாங்க . அது அவசியப்படவில்லை. பலருக்கு பல சந்தர்ப்பங்களில் பல பிரச்சினைகளுக்கு தீர்வும் ஆறுதலும் சொன்ன எனக்கு அது எப்படி அவசியமாகும்.
இறைவன் நமக்கு நாடுறது மட்டும்தான் கிடைக்கும் என்று நம்புபவன் நான். 

மிலாவின் நினைவாக இருந்த அவளுடைய சோல், தேர்தல் காலத்தில் இருக்கும்போ அவள் தம்பியிடம் எனக்கு தொழுவதர்க்கு அனுப்பிய முசல்லா, புகைப்படங்கள், அவளோடு பேசும்போது தொலைபேசியில் பதிவுசெய்து அப்பப்போ கேட்கும் ஒலி தாங்கிய மெமோறிக்காட், என்னையும் அவளையும் இணைத்து போட்டோசொப் செய்து கழுவி வைத்திருந்த போட்டோக்களையும், DVD CD யையும் வாசலில் போட்டு எரித்துவிட்டேன். 
இந்த இடத்தில் காதல் வரலாற்றையும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதுதான் பொருத்தம். 
 தெளிவும் சுவாரசியமும் வாசகர்களுக்கு இருக்கும் என்ற காரணத்தினால் சொல்கிறேன்.

காதலி பெயர் மாற்றப்பட்டிருக்கிறது...#மிலா என்று.....
2009 பத்தாம் பதினொராம் மாத காலப்பகுதியில் தைக்காநகர் சஹ்ரா பாடசாலைக்கு அருகில்  நான் நடத்திய gaf ஆரம்பப் பாடசாலையின் விடுகைவிழாக்கான நடனங்களை நானே பயிற்றுவித்துக்கொண்டு இருந்த காலமது.

மிலாவின் தம்பியின் நட்பும் கிடைத்து ஓரிரு மாதங்கள் ஆன போதும் அவன் ஒருநாள் என்னிடம் எண்ட ராத்தா படிச்சுக் கொடுக்கிற ஒரு நேசறிக்கும் டான்ஸ் பழக்கனும் ஏலுமா எண்டான். சரி செய்வோம் என்று அங்கு போனபோது இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள் அதிலொன்றுதான் மிலா.

 நடனம் பயிற்றுவிக்க வாசியான விசாலமான அறை. பயிற்சி ஆரம்பிச்சு இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் காலை ஒரு இடம் மாலை ஒரு இடம் என்று போய்க்கொண்டு இருந்த போதும்.
முழுவதும் மூடிய அவளின் உருவத்தின் முகத்தில் தெரிந்த அழகிய இரண்டு கண்களும் என்னை ஏதோ செய்து காதலிக்கும் படியும் கனவுகளையும், கற்பனைகளையும் சரமாரியாக என் மனதில் உற்பத்தி செய்து கொண்டிருக்க அவளுக்கும் எனது நவரசம் பிடித்துப்போக விடுகை விழா நிகழ்வுக்கு முந்தியே இருவரும் காதலிக்கத் தொடர்ந்துவிட்டோம்.
தொலைபேசி உரையாடல்கள்.
 தோது கிடைத்தால் சந்திப்பதண்றும் தொடர்ந்தது காதல்.

ஒருநாள் கோல் அடிச்சவள்.....
வாப்பாக்கும்  காக்காக்கும்  தெரிஞ்சிட்டு நாம லவ் பன்றது அவியலுக்கும் உங்கள பிடிச்சிருக்கு ஆனா கௌமண்ட் ஜொப் எடுக்கட்டாம் அப்பான் முடிக்கிறாம் எங்கார் என்ன செய்யப் போறையல்...? 
நான் வெளிநாடு போற ஐடியாவுலான் இருந்த சரி ஜொப் எடுப்போம்.

அந்தக் கால கட்டம் தான் ஏற்கனவே சென்ற பதிவுகளில் சொன்ன வேட்பாளராகி சேக்குட்டில் இருந்த காலம்...அந்த நேரம்தான் தொழ முசல்லா வந்ததும்.

 பழைய சினிமா வீதியில் ஒரு இடத்தில் தேர்தல் கூட்டத்தில் அனிபா மதனிக்கும் மத்த வேட்பாளர்களுக்கும் சரமாரியாக ஏசிவிட்டு நானும் ஒரு நண்பரும் அவள் வீட்டுக்குச் சென்றோம். அவள் வாப்பாவும் எங்களை மரியாதையாக அழைத்து சில விடையங்கள் பேசிவிட்டு, என்னையாம் அதாவுல்லாஹ் சேர் தொழில் தாறாமா எண்டார்.
ஓம் தாற என்று வாக்குத் தந்திருக்கார்... எலக்சன் முடியட்டுமே எண்டன்.
சரி மகன் நீங்க கடுமையா கதைக்கையல் இனி கொஞ்சம் நோமலாப் பேசுங்கோ மேடையில என்ற ஆலொசனையையும், ஜூசையும் குடித்துவிட்டு வந்திட்டம்.

அதுக்குப் பொறகு என்ன.
 அன்னா தருவார் இன்னா தருவார் என்று காத்துக்கு இருந்து காதலும் கைமாறிப்போய் அவளுக்கு மாப்பிள்ளையும் பாத்துட்டாங்களாம் என்ற தகவலும் கிடைத்தது.
சரி அவனுக்கு கௌமண்ட் ஜொப்பா என்று விசாரிச்சா இல்ல சவுதி போய்வந்து சேல்ஸ்மேன் வேலையாம் ஜொப் தேர்ராராம்.
ஹா மிலாக்கு அவனப் புடிச்சிருக்காமா...? 
மறுகா கடும் லவ்வலா போகுது.
ஆஹா அது சரி.

மூணு வருசத்துக்குப் பிறகு கிடைத்த நியமனத்தின் பின் எல்லாம் தெரிந்தும்.
மிலாவின் வாப்பாக்கு கோல் அடிச்சு.

நான்_மிலாட வாப்பாவா என்று கேட்க
அவர்_ஓம்.
ஹா. நான் றுபைஸ். ஜொப் கெடைக்க கல்யாணம் முடிப்பம் எண்டையல் என்ன விசையம் எண்டன்.
ஆ.....ஹிம்.....என்று இழுத்துக்குச் சொன்னார் இல்ல மகன் நாங்க வேற மாப்பிள்ளை பாத்துட்டம் இன்னொம் ரெண்டு நாள்ள கல்யாணம்.

நான்_ஹா அதுசரி.
அப்ப அவ தந்த சோல் முசல்லா, போட்டோ, கதச்ச றெக்கோட் எல்லாம் இரிக்கு பத்தவக்கட்டா...? 
சரி மகன் பத்த வைங்கோ என்றவுடன் சலாத்துடன் தொலைபேசியை வைத்துவிட்டு சரளமாக எனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
அதுலிரிந்து ரெண்டு நாளாலதான் x  வந்து ஏச்சுப் பட்ட...

கல்யாணம்  முடிச்சி ஒரு வருசமும் ஆகல்ல ஒருநாள் mc நூலகத்தில இருக்கன் வந்த x பேப்பர்ல வேலையல் சம்மந்தமான விளம்பரங்களப் பாத்துட்டு என் பக்கத்தில் வந்து றுபைஸ் லோன் ஒண்டு எடுக்கனும் கொஞ்சம் கடன்.
 நீ ஒரு கரண்டஸ் சைன் வக்கனும் டா எண்டான்.
சின்னச் சிரிப்போட நான்.
எப்படியும் இந்த வேல கிடைக்க அவளும் ஒரு காரணம்தான கட்டாயம் வைத்துக் கொடுப்போம் என்று முடிவுசெய்து வைத்தும் கொடுத்து லோனும் எடுத்துட்டார்.

அதுக்குப் பிறகு இடைக்கிட காசு கட்டாம பேbங்கில் இருந்து எனக்கு வந்த அழைப்புகளுக்கு பதில் சொல்லிவிட்டு xயை தொடர்பு கொண்டு சொல்லியும் மீண்டும் பிரச்சினை தீரும் பாடில்லை.
Xக்கு அழைப்பை ஏற்படுத்தினால் off, பின்னன்ன மிலாட வாப்பாவிடம் கொஞ்சம் உண்டனச் சொல்ல மொத்தமாகவே கட்டிவிட்டு வந்து சொன்னார் x றுபைஸ் லோன் எல்லாத்தையும் முடிச்சிட்டன் என்று....
சந்தோசம்.

#தொடரும்......gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages