அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்.
தொடர்_11...
அன்று இரவு நான் என்னோடு அர்ரபாத் எனது மூத்த சகோதரர் கலீலின் நண்பர் அர்ரபாத் மூலமாக எனக்கும் நண்பராக இருந்தார்.
றம்சான் இவர் குழந்தை மனம் குழந்தை குறும்பு எல்லாம் கொண்ட ஒரு சுவாரசியமான நண்பர்.
மூவரும் கிழக்கு வாசலுக்கு முன் கடற்கரை அருகில் மணலில் உக்காந்து பேசிக்கொண்டு இருந்தோம்.
நாங்கள் எப்போதும் கிடைக்கும் நேரங்களில் அந்த இடத்தில் அமர்ந்து பலதைப் பகிர்ந்துகொள்வோம்.
அதேபோல அன்றும் சிலது பகிரப்பட்டாலும் ஒருசில தினங்களுக்கு முன் அக்கரைப்பற்று போலிஸ் அனுசரணையில் பொலிஸ் மைதானத்தில் நடந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு இசை நிகழ்வு பற்றி அர்ரபாத் பேச ஆரம்பித்தார்....
முதலில் அவர் கேட்ட கேள்வி ஏன் றுபைஸ் இடையில் போனியல் நான் தேடினன் நீங்க இல்ல எத்தின கோல் அடிச்சிருப்பன் போன் ஓப்f என்ன நடந்த...?
அண்டும் கேட்டன் நீங்க சொல்லல இப்போ சொல்லுங்கோ எண்டார்.
ஓம் அர்ரபாத் நீங்க கூப்புட்டையல். நூறுல்லாவும் கூப்புட்டார் அதுவும் சேட்ட உள்ளுக்கு உட்டு சப்பாத்தும் போட்டுக்கு வரச் சொன்னார். சரி நானும் வந்தன் அதுமட்டுமில்ல பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்துக்கு என்று பிரத்தியேகமாக ஒரு இடம் ஒதிக்கியிருந்தாங்க அப்ப மாமாக்கிட்ட சொன்னன் எல்லாரையும் கூட்டி வாங்கொ என்று அவரு எல்லாரையும் கூட்டிக்கு வந்துட்டார்.
நான் எப்படித்தான் நூறுல்லாஹ் தலைமையிலான சூப்பர் ஸ்டார் இசைக்குழுவின் பிரதான அறிவிப்பாளராக வலம் வந்தாலும் மூத்தவர்கள் இருவர் அங்கு தொகுத்து வழங்கினர்.
(அனஸ்,பிஸ்ரின்) நான் பொறுமையாக இருந்தேன் சந்தர்ப்பத்தைக் காத்துக் கொண்டு.
இதே போலத்தான் போன முறை நடந்த புதுவருட இசை நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இடையிடையே நானும் தொகுத்து வழங்கி சங்கீத மேகம் பாடலும் பாடினேன்.
அதுவும் என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் எனது அறிவிப்பு போகும்போது எப்படி ஆரவாரம் கைதட்டல் இட்டு வரவேற்றார்கள் என்று உங்களுக்கு தெரியும். அந்தப் புறாமையோ....! இல்லை வேறு ஏதாவது பலிவாங்கலோ என்றும் தெரியாது.
சரி விடையத்துக்கு வாறன்.
அப்ப நான் காத்துக்கு நீண்டன் ஒரு பத்துப் பாட்டுப் பெய்த்து அப்புறம் மேடையில் ஏறி நூறுல்லாக்கிட்ட கேட்டன் நான் எப்போது பேசுவது என்று அவர் சொன்னார் அனஸ் கிட்ட கேளுங்கோ எண்டு அனஸ்கிட்ட கேட்க அவர் சொன்னார் நான் இந்தப் பாடலுக்குச் சொல்ரன் அடுத்தது நீங்கான் எண்டு சரி எண்டு காத்துக்கு இருக்கன்.
அடுத்து பிஸ்ரின் பேசுரார் சரி பிஸ்ரின் கிட்ட கேட்டன் ஓம் இருங்கோ அடுத்து நான் ஒரு பாடலுக்குச் சொல்லுரன் அப்புறம் நீங்க செய்யுங்கோ எண்டார் சரி என்று காத்திருக்க அனஸ் பேசினார் இப்படியே ஆளாள் மாறி மாறி அறிவிப்புச் செய்தார்கள் பலமுறை. அவமானப்படுத்தினார்கள்.
நூறுல்லாவிடமும் பல முறை கேட்டும் கடைசியா அவர் சொன்னார் றுபைஸ் ஒங்களுக்கு சொன்னா வெளங்கிறல்லையா எண்டு.
அதோட நான் என்னடா வாய்ப்புக்கு அலையிற ஆளாடா நான் வாய்ப்புகளை உருவாக்கி அதையும் மத்தவனுக்கு களம் அமைத்துக் கொடுக்கிற நம்மளுக்கு இந்த அற்ப இசையில் எதுக்கு வாய்ப்பு என்று இறங்கிப் போகும்போது.
மாமாக்குக் கோல் பன்னி எனக்கு வேற வேலை ஒண்டு இருக்கு அவசரமா கல்முனைக்குப் போறன் நீங்க பாத்துட்டு போங்கோ என்று பொய்யச் சொல்லிட்டுப் பெய்த்தன்....
வீட்ட வந்து அன்று நான் எழுதிய கவிதை ( பாடல் ).....
நீ.நீ. நான் நாம் யாரும் பெரியவன் இல்லை
மண்ணில் வாழும் யாவும் இறைவனின் பிள்ளை//.2
//போராடு நீயும் போராடு
போர்வாளாய் நாளும் போராடு//..2
...வழி உண்டு தடையில்லை
வாழும் வெரை போராடு.
நடை எடு வழி விடும்
நாடோ வீடோ ஒதிங்கிடும்..
(நீ.நீ.நாம்)
மெழுகு வர்த்திதான் வாழ்க்கை என்றால் மெழுகு வர்த்திபோல் வாழு
..மணல் மேடுகளை மலையாய் நினைத்தால் மலை ஏறுவது யாரு..?
//இல்லாத ஒன்றை நினைப்பதை விடு
இருக்கின்ற வாள்க்கை உனக்கன்று சொல்லு //..2
....காசு வெறும் தூசு...
அது நல்லவன வல்லவனா மாத்திபுடூம்...
....யோசி நீ யோசி...
காசு மட்டும் வாழ்க்கையில் பாதி பலோம்...
( நீ நீ நான்)
எதை வெல்ல நீ நினைத்தாலும்
அதே பாதையில் ஓடு
....வெறி கொண்டு நீ
வாழ்ந்தது போதும்
வலி தாண்டி நீ ஓடு.
//கல்லான நெஞ்சம் கொள்வதை விடு.
தில்லாக மாறி ஜில்லாவைத் தொடு...//..2
....பேச்சு உன் மூச்சு
நீ மெல்ல மெல்ல வளரும் ஆல மரோம்..
சாட்சி மனச்சாட்சி அதக் கொன்னாலும் உன்னில் ஞானம் வரூம்...
( நீ. நீ. நான்)
அர்ரபாத் மற்றும் றம்சானும் மிகவும் கவலை அடைந்தார்கள்.
என்னுடைய கலைத் திறமைக்கு முதல் அங்கிகாரம் கொடுத்தது இந்த அர்ரபாத்தான் பல இசை நிகழ்ச்சிகளில் பார்வையாளராக இருந்த என்னை உள்ளே அழைத்து அறிவிப்பு செய்வதர்க்கும் பாடுவதர்க்கும் வாய்ப்புத் தந்தார்.
பின் பல இசைக் குழுக்களுக்கு அறிவிப்பாளராக இருந்தாலும் நூறுல்லாவின் சுப்பர் ஸ்டார் இசைக்குழுவில் பிரதான அறிவிப்பாளராக பல வருடங்கள் அங்கிகாரம் தந்தார்கள்.
இந்தப் பயணத்தில் மறக்கமுடியாத கலைஞர்களின் உறவுகளும் கிடைத்தது
சிபான்,சபான்,றியாஸ்,சுப்ரி,ரபீஸ்,அஸ்ரப்sr,லெத்தீப், ஹனீபா, சபீர், முபாரக், சப்னி, லாபிர், அர்சாத், என்று பலருடைய உறவுக்கும் அப்பால் கலைஞர் சாக்கீர் ஹுசைனின் நட்பும் கிடைத்தது எங்களுடைய உறவு ஒருவகை ஆத்மீகமானதும் கூட.
இந்த இடத்தில் இரண்டு விடையத்தை சொல்லவேண்டும்.
அதில் ஒன்று நூறுல்லாவிற்கும், அர்ரபாத்திற்கும் நன்றிகள்.
இரண்டாவது...
சாஜித் அஹமட்டின் நிறம் பூசும் குழந்தைகள் நூல் வெளியீடு பற்றி.....
சாஜித் சொன்னார் றுபைஸ் நான் இப்படி நூல் ஒண்டு எழுதியிருக்கன் இன்னொம் ஐந்து நாள்ள வந்துடும் நிகழ்ச்சி செய்றா இல்ல ஒவ்வொருத்தர்ர கைல கொடுக்குறா என்று.
நான் சொன்னன் இல்ல சாஜித் நிகழ்ச்சி ஒண்டு செய்வோம் ஒரு பத்துக் கலைஞர்களைத் தெரிவுசெய்து என்னுடைய அமைப்பின் ஊடாக ஒரு விருதும் கொடுத்து நூலையும் வெளியிடுவோம் என்று அவரை சம்மதிக்க வைத்துவிட்டு அதற்கான பணியைத் தொடர்ந்தோம்.....
இதர்க்காக நண்பர் மாஹிர் கடினமாக ஒத்துழைப்பும் உதவியும் வழங்கினார்.
நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக அதாவுல்லாஹ் அரங்கில் நடைபெற்றது. குறிப்பாக பார்வையாளர்களை ஒரு நொடி கூட இருக்கையை விட்டு நகர விடவில்லை என்றும் சொல்லலாம்.
அசல் விஜய் அவாட் போல நடத்தினோம்.
Gaf award என்ற பெயரில்.
மக்கத்தார் மஜீத், சர்மில், கியாஸ், ஆசு கவி அன்புடீன், புலவர் மஜீத், கவிஞர் மஜீத், வெண்ணிலா அபூ, முதல் மேயர் சகி, பாடகர் அர்ரபாத், பதுர்டீன் vdo ,
போன்றோருக்கு விருது கொடுக்கப்பட்டது. என்னாலே இந்த நிகழ்வும் தொகுத்து வழங்கப்பட்டது......
பத்திரிகையில் செய்தியாக வந்தாலும் இன்றும் சிலர் இந்த நிகழ்வு பற்றிப் பேசுவார்கள் அதன் சுவாரசியம் பற்றியும், ஒவ்வொருத்தர் பற்றி நாங்கள் ஒளிபரப்பிய ஆவணம் பற்றியும் ஆனால்.
சாஜித் தொலைக்காட்சியில் நூல் பற்றிப் பேசிவிட்டு வந்தபோது சிலர் என்னையும் சாஜித்தையும் பிரிக்க எத்தனித்தார்கள்....
றுபைஸ் நீங்க எவ்வளவு கஸ்ட்டப் பட்டையல் தூவானத்துல சாஜித் ஒங்குட பெயரையே சொல்லல பாத்தியலா...?
அதுவும் அவர்ர ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் பெயர்கூட வந்தது என்று ஆரம்பிக்கும்போதே நிறுத்திவிட்டுச் சொன்னேன்.
எங்கள் உறவு வேறு அவனுடைய சொந்தப் படைப்பு அது யாரைப் பற்றி பேசனும் எங்குறத படைப்பாளந்தான் முடிவு செய்யனும். அதுலையும் இதல்லாம் எதிர்பார்த்தும் நான் செய்யல இதுபற்றிய இனி கதைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு நர்ந்துவிட்டேன்.
#வாருங்கள் மீண்டும் கடற்கரை செல்வோம்.
அப்படியே பேசிக்கொண்
டு
போட்ட மெட்டுக்கு அர்ரபாத்துட குரல்ல கொஞ்சம் பாடிக் கேட்டுக்கு இருக்கும்போது மாமாவின் அழைப்பு வந்தது.....
ஏதோ வேறு பிரச்சினையில் அவ்வாறு சொல்லிவிட்டேன் மன்னிச்சுக்கோங்கோ மருமகன் கல்யாண வேலையச் செய்ங்கோ எண்டார்.
சரி என்று விட்டு வாழ்க்கை குடும்பம் என்றால் எல்லாம் வாறான திருமண வேலை நடந்தது.
அன்று இரவே அடுத்த கவிதையும் வந்தது ( பாடல்)......
நீ நீ நீ வள்ளுவரின் குரல்
படித்திடவா மன்மதனின் மகள்
தேனூறும் தேவதை அவள்
தொடுவது போல் தோணுதடி......
( நீ நீ நீ )
உன்னை ஒரு நொடி சந்தித்தேன்
உலகை ஒரு நொடி சிந்தித்தேன்
விடியல் வரும்முன்னே விளித்தேன்
வியர்வை வரும்வரை துடித்தேன்.
புழுதியில் துகள் ஆனேன்
புகைப்படம் போலானேன்
தனிமையில் கவி ஆனேன் இசையினில் மொழி ஆனேன்...
சிறையினில் நுழைந்தேனே
சிலுவையில் அறைந்தேனே....
சிவனொளி மலை போலே...
சீகிரி சிற்பம் போலே....
( நீ நீ நீ )
தொல்லை தருவதை நினைத்தேன்
எல்லை அதுவரை தொலைத்தேன்
என்னை நானே இங்கு எரித்தேன்
அள்ளி உன்னிலே கரைத்தேன்.
கடலினில் அலை ஆனேன்
கரையினில் நுரை ஆனேன்
சாலையில் தனி ஆனேன்
சகலதும் நீ தானே....
பனியிலே இரவானேன்
இலையிலே துளி ஆனேன்
நதியிலே படகானேன்
நடுநிசி இரவானேன்
( நீ நீ நீ )
இந்தப் பாடலில் நான் நடித்து ஒளிப்பதிவாக வெளியிடப்பட்டது அநேகமானோர் பார்த்தும் இருப்பீர்கள்...
#தொடரும்_gafrufais
Post Top Ad
Thursday, 4 October 2018
அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர். தொடர்_11.
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment