அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர். தொடர்_10.... - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 4 October 2018

அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர். தொடர்_10....

#அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்.
#தொடர்_10....

நமக்கான அந்தக் காதலியை, மனைவியை நம் மனதில் கற்பனையில் ஒரு வடிவத்தை வைத்திருப்போம்.
ஆனால் நான் பார்த்த அந்தக் கண்கள் மட்டும்தான் எனது கற்பனைப் பெண்ணின் உருவத்தில் ஒன்று மீதம் அனைத்தும் வேறு அதனால் அவள் பிரிவு எனக்குப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

ஆனாலும் முதல் காதலில் நான் அவளைப் பார்த்தபோதே எனக்கு இரண்டாம் கவிதை பிறந்தது.....
ஏன் என்றால் எனக்கு ஏற்படும் உணர்வுகளுக்கு ஏற்ப கவிதை எழுதி அதற்கு மெட்டு அமைத்து பாடலாகவே பாடிவிடுவேன்.

அப்படித்தான் முதல் கவிதை எனக்குப் பிறந்தது ஒருநாள்.... அன்று இந்த அரசியல் தந்த அவமானங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்ட அந்த நாள் எழுதிய முதல் கவிதை....

நெஞ்சிலே நெஞ்சிலே பாரம்
வாழ்க்கையே வாழ்க்கையே சோகம்
நினைவுகள் இருக்குமே
என் கனவுகள் தோர்க்குமே....
நெஞ்சம் சோதனை கூடத் தாங்கும்.
எந்நாளும் சோகத்தில் வாடும்.
         நெஞ்சிலே..... பாரம்
         வாழ்க்கையே..... சோகம்
                        ( நெஞ்சிலே )

ஏக்கம் ஒன்று என்னில் வந்து கீதங்கள் பாடுமே.
இந்த பூமி என்னை இன்று சுமக்கவே மறுக்குதே.

என்மேல் யாரும் கொண்டதில்லை நேசமே......
நானும் கொண்டே அனைவர் மீதும் பாசமே..... 
நெஞ்சிலே..... பாரம்
வாழ்க்கையே ....சோகம்.
                         ( நெஞ்சிலே)

கூடவரும் எந்தன் நிழல் கூடவே வாழுவேன்.
காற்றுக் கூட என்னை இன்று தீண்டவே மறுக்குதே.

வாழ்க்கை எனும் துன்பக் கடலில் நானுமே....
தெக்குத் தெரியா திணறி வரு ஓடமே....

எந்தன் கை என்னை வெட்டிப் போடும் 
தூக்கம் வந்து கனவில்  எனை சுட்டுப் போடும்.
                      (நெஞ்சிலே)

அப்படி அந்த நிலாவைப் பார்த்த முதல் நாளே ஒரு கவிதையும் கூட வந்தது......

உயிரின் உயிரான காதலியே.
கண்கள் மூடாது கண்மணியே.
கண்கள் மூடாத வாழ்க்கையிலே.
காதல் கொண்டேனே நானே.
என் கண்மணி உனக்காகத் தானே....
                  ( உயிரின் )
உந்தன் பாதச் சுவடுகள் பூமியிலே படும் வேளையிலே.....ஓ...ஒ...
மலர் தோரணையாய் நான் பாய் விரிப்பேன் என்னை பூமியிலே....ஓ...ஓ...

விரலோடு வீணை இசைக்காத பாடல்.
குரலாலே நானே பாடிடுவேனே...
முதலா...இல்லை முடிவா.... இல்லை கனவா என்று சொல்லிவிடு என் தங்கமே.....
                     ( உயிரின் ) 

என் மனதில் எழுகின்ற காதலினை கவி வரிகளிலே....
கலை ஓவியமாய் நான் வரைந்திடுவேன் உன்னை வார்த்தையிலே...

உடலாலே நீயும் பிரிந்தாலும் கூட உயிராக நாமே சேர்ந்திடுவோமே....
 நிழலா.... இல்லை நிஜமா.... உள்ளம் சுகமா... என்று சொல்லிவிடு என் தங்கமே......
                  ( உயிரின் ).

என்று கவி எழுதி அதை அவளிடமும் பாடலாகப் பாடிக் காட்டிவிட்டு அவள் குரலில் அடிக்கடி கிராத் ஓதிக் கேட்ட நான் அன்று ஒரு பாடல் பாடிக் காட்டும்படி கேட்டு அவள் பாடிய அந்தப் பாடல் அவ்வளவு இனிமை. 
மட்டுமா இப்போது எங்காவது அந்தப் பாடலைக் கேட்டாலும் அவள் ஞாபகம்.
எதேர்ச்சையாக எனக்கு அந்தப் பாடல் நாவுகளில் சிக்கிக்கொண்டாலும் அவள் ஞாபகம்தான் வந்து போகும் ஆனால் அவள் பாடலில் ஒரு பந்தியை மட்டும்தான் பாடினாள்....
( அடை மழை வரும் அதில் நனைவோமே.. குளிர் காய்ச்சலோடு ஸ்நேகம் ஒரு போர்வைக்குள் சிறு தூக்கம்...... குழு குழு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் உனையேதான் எதிர்பார்க்கும்.)
அவள் நினைவுகளை எரிக்கும்போது இந்தப் பாடல் என்னால் சத்தமிட்டு பாடப்பட்டதும் உண்மைதான்.

இப்படியான உணர்வுகள் பிரிவில், காணாமல் போன காதலில் எப்படி கவிதை வராமல் இருக்கும்...?
ஆம் அவள் திருமண நாள் அன்றும் வந்தது ஒரு கவிதை.
( என் கவிதைகளில் உயிர் என்ற சொல் அடிக்கடி வரும். ஏன் என்றால் சொற்கள் எனதுயிருக்குள் இருந்து பிறப்பதால்)

மோதலா... இல்லை காதலா....
தேடலா.... இல்லை ஊடலா.
இது உயிராலே வரைந்து வைத்த பாடலா...
இல்லை உயிரோடு கலந்து வைத்த காதலா...
                 ( மோதலா)
பெண்கள் என்ன பேய்களா....
போடுவதன்ன வேசமா...
கன்னிகள் எல்லாம் காந்தமா...

கடவுள் சொன்னால் போதுமா.....
             ( மோதலா )
மேகம் என்ன தூரமா...
பூமியில் எல்லாம் சாபமா...
வேதனை சொல்ல வேணுமா....
வெளியே சொன்னால் கோபமா.....   
                      ( மோதலா )
இப்படி சுமைகளை கவிதைகளில் இறக்கி வைத்து நகர்ந்த காலத்தில் என் வீட்டில் மருமகளுடன் சுரட்டையில் ஈர மண் எடுத்து அப்பம் சுட்டு விளையாடிக்கொண்டு இருந்த அந்தச் சிறுமிதான் என் மனைவியாக வருவாள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை....
அது வேறு ஒரு சரித்திரம்.

எல்லாம் மறந்து சில வருடங்கள் கடந்து சுற்றிவளைத்து காரியாலயத்தில் ஆதன வரிப்பிரிவில் தற்போது கடமைசெய்யும்போது இனி என்ன அரசாங்கத் தொழில், ஓட ஒரு பல்சர் பொண் ஒண்டப் பார்த்துக் கட்டி வைப்போம் என்று பல பக்கம் பெண் தேடும் பணியை குடும்பம் செய்தது.
ஆனால் எத்தனையோ பார்த்தும் எனக்குப் பிடிக்காமல் போக இவள் பற்றி என்னிடம் கேட்டார்கள்.

நான் மறுத்துவிட்டேன் ஏன் அவளை சிறுமியாகப் பார்த்து ஒரு இரண்டு மூன்று வருடம் இருக்கும் அவளை எப்படி என் மனைவியாக என்று மறுத்துவிட்டேன். சரி என்று வீட்டார் விட்டுவிட்டார்கள்.

ஆனால் காலம் வித்தியாசமானது.
இயற்க்கை அதிசயமானது.
இறைவன் விளையாட்டுக் காறன்.

ஒருநாள்.
 அந்த ஒருநாள் அவளுடைய மாமா எனக்கு மச்சினன் முறை வரும் அவனுடைய திருமணத்துக்கு என்னை அழைக்க நானும் சென்றபோது ஒருத்தி அங்கு நடமாடுவதைக் கண்டபோது எனது கற்பனையில் இருந்த அந்தப் பெண்ணின் முழு வடிவம்.
ஆஹா எனக்காணவளை இங்கு வைத்துவிட்டா நான் வேறு எங்கோ தேடுகிறேன்.

உயிரிலே எந்தன் உயிரிலே.. வந்து நுளையுதே... கட்டியிழுக்குதே.

முதல் முறை உன்னைப் பார்த்ததும் அந்த நொடியிலே என்னை மறந்ததே....

அந்த ஒரு நொடி
எந்தன் வாழ்வினிலே...
ஒரு புது நொடி என ஆனதடி.
அந்த ஒரு நொடி
எந்தன் வாழ்வினிலே ஒரு புது நொடி என ஆனதடி.....

ஓ....ஹோ. உந்தன் சிரிப்பினில் ஒரு துளி.
நீந்தும் இந்தப் பூக்களில் பனித்துழி மீண்டும் அந்த அழகினை நீ தர வேண்டும் அதை நான் மட்டும் ரசித்திட.

இல்லை நீ யாருக்கும் இல்லை இது வாலிபத் தொல்லை புதுக் காதலின் எல்லை....

நீதானே.........
என் தோழி......
அன்பென்றால்.....
சரிபாதி.........
               ( உயிரிலே ) 
ஓ....ஹொ.
உந்தன் விழிகளில் அதிரடிப் போ போ
அது விழி என்ற சரவெடித் தீ.... தி. 
தீப் பொரி கொண்ட கரு விழி நீ..... நி 
ஒரு நிஜம் என்ற சிலையடிப் பெண்ணே...

நீ
பிறந்ததுமின்று 
இரு நிலவுகள் உண்டு
அதில் எனக்கன ஒன்று...
நீதானே......என் காதல்
உனை நானே..... தொடும் தூரல்.

இனி என்ன அவளை முடிப்பதற்கு அனைத்து பேச்சுவார்த்தைகளையும் குடும்பம் பார்த்துக் கொண்டது.
காதலிக்கும் வேலையை நான் பார்க்கத் தொடங்கினேன்.

வாழ்க்கையில் குடும்பங்களில் அப்பப்போ சிறு சிறு பிரச்சினைகள் வருவது சகஜம்தான் அதுவும் திருமண காலப்பகுதியில் அது அதிகமாகவே இருக்கும் அப்படி ஒரு கருத்து முறன்பாட்டில்....
மாமனார் பொலீஸ் உத்தியோதர் வேற கொஞ்ச கோவக்காறனும் கூட. திருமணம் நடத்தத் தீர்மாணித்த நாளுக்கு முந்தைய நாள் தகவல் அனுப்பிவைத்தார்.
திருமணம் நடக்காது எல்லாத்தையும் நிறுத்திக் கொள்வோம் என்று.....

உயிரே....உயிரே.....
எனக்குள் மறுபடி வருவாயா....?
நிலவே....நிலவே....
மறுபடிக் கனவொன்று தருவாயா....?

காதல்.....வருதே....
காயம்.....தருதே.....
ஆதாம் ஏவாள் காலம் வருதே.....
வாழும் காலம் உனக்கன உயிரைத் தருவேன் வருவாயா...?
வானம் போலே வாழும் வரையில் வரமொன்று தருவேன் வருவாயா...?

தொலையும் இரவே தொடரும் பகலில் முட்கள் கூடச் சருகாச்சே.
தன்னந்தனியே தாவும் கிளியின் தாகம் கூடச் சிறையாச்சே....

காதலே....வாழ்க்கையில்.
காயமே ஆனதே....
அன்பினால் வாழுதே...
என் உயிரே.....

போதுமே போதுமே
போலியாய் போனதே...
போதையில் போகுதே....
என் உயிரே....
                   ( உயிரே )
#தொடரும்...... Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages