உலக உணவுப் பாதுகாப்பு சுட்டெண் பட்டியலில் இலங்கை 66ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் தெரிவித்துள்ளது.
உலகின் 113 நாடுகளுக்கு இடையில் பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சுட்டெண் உருவாக்கப்பட்டு தரப்படுத்தப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சுட்டெண் அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொத்த பட்டியலில் இந்தியா 74 ம் இடத்திலும், பாகிஸ்தான் 77ம் இடத்திலும், நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் 81 மற்றும் 80ம் இடங்களில் இருக்கின்றன. மேலும், பங்களாதேஷ் 89ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment