இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நேற்று(25) நடைபெற்றது.
ரஷ்யாவுக்கான தேயிலைச் சபைத் தலைவர் ரோஹன் பெட்டியகொட இலங்கைக்கான ரஷ்யா உயர் ஸ்தானிகர் எச்.ஈ. சமன்வீரசிங்க தலைமையிலான குழுவினருக்கும் Russian Federal Service for Veterinary and Phytosanitary Surveillance (Rosselkhoznadzor)இற்குமிடையில் நடைபெற்றுள்ளது.
சுமுகமாக நடைபெற்ற குறித்த இந்த பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை இம்மாதம் 30 ஆம் திகதி நீக்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ரஷ்யா இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் கெப்ரா என்ற வண்டு ஒன்று இருந்ததாகத் தெரிவித்து இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment