அடுத்தாண்டில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒபெக் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட எண்ணெய் விநியோகம் தொடர்பிலான உடன்படிக்கை, அடுத்தாண்டில் முறிவடையும் என, நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் உச்சநிலையில் பின்பற்றப்பட்டமையினால்;, மசகு எண்ணெய்யின் விலை 65 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
இந்த நிலையில், அடுத்தாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உலக சந்தையில் மசகு எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக மசகு எண்ணெய் சார்ந்த நிறுவனங்களுக்கு இடையிலான உடன்படிக்கையில் தளர்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




No comments:
Post a Comment