சந்தையில் தேங்காயின் விலை குறைவடைந்துள்ளது.
தேங்காயின் விலையின் விலை குறைந்துவருவது தொடர்பாக தெங்குச் சபையின் தலைவர் கபில யகந்தாவல கருத்து தெரிவிக்கையில் தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது.
ஒரு தேங்காயின் அதிக பட்ச விலையை 75 ரூபாவாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் தேங்காயின் விலை குறைவடைந்துள்ளது.
போதியளவு தேங்காய் சந்தைக்கு கிடைத்து வருகிறது. தேங்காய்க்கான தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும் தேங்காய் விற்பனையில் ஒருமேலாதிக்கம் காணப்பட்டதாக தெரிவித்தார்.
இதுவே விலை ஏற்றத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த மாதமளவில் தேங்காய் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக தேங்காய் சந்தைக்கு கிடைக்கும் போது தேங்காயின் விலை மேலும் குறைவடையும் என்நும் தெங்குச் சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறினார்.




No comments:
Post a Comment