தேயிலைத்தோட்ட உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து சம்பளப் பணத்தை கொள்ளையிட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதி வான் சாந்தினி மீகொட முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதி வான் உத்தர விட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நாவலப்பிட்டி தொளஸ்பாகை பிரதேசத்தைச்சேர்ந்த சந்தேக நபர்களில் மூவர் கொழும்பில் நிறுவனமொன்றில் வேலை செய்து வந்துள்ளனர் .
இந் நிலையில் மேற்குறிப்பிட்ட தோட்டத்தில் முன்னர் கடமையாற்றி வேலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த நான்காவது சந்தேக நபரும் குறித்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந் நிலையில் அங்கு அறிமுகமாகிய புதிய நண்பருடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின் படி கடந்த 9 ஆம் திகதி குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கென கொண்டு வரப்படும் பணத்தை தோட்ட உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையிடுவதென திட்டம் தீட்டிய பொழுதும் ஒரே நாளில் நால்வருக்கும் நிறுவனத்தால் விடுமுறை வழங்கப்படாமை
யால் குறித்த திட்டத்தினை பிறிதொரு தினத்திற்கு மாற்றிகொண்டதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதற்கமைய கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த சந்தேக நபர்கள் குறித்த தோட்ட உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு பெட்டியை திருடி முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று கெலி குறூப் என்ற பிரதேசத்
தில் அமைந்துள்ள காட்டுக்குள் வைத்து உடைத்து அதிலிருந்த 2 இலட்சத்து 54 ஆயி ரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டு தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்தகறுவாத்தோட்ட பொலிஸார் கடந்த வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரணையின் பின்னர் வெள்ளி க்கிழமை கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் மேற் கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.
No comments:
Post a Comment