புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மாகர்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவது தெரியவந்திருக்கிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 3, 2018-இல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 120 முதல் 150 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7500 முதல் ரூ.9500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனுடன் மோட்டோ இ5 பிளஸ் மாடலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்து அதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், புகைப்படத்தில் சில அம்சங்கள் தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் இருக்கும் இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை கைரேகை சென்சார் பின்புறம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மேல் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது.
முந்தைய மோட்டோ இ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஹோம் பட்டனுடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனிலும் 16:9 ரக 5.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பவர் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்களும் ஸ்மார்ட்போனின் வலது புறத்திலும், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படுவது புகைப்படங்களில் தெரியவந்திருக்கிறது. இத்துடன் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் முந்தைய மாடல்களை போன்று மீடியாடெக் சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment