கைப்பற்றப்பட்ட 928 கிலோ போதைப்பொருள் பகிரங்கமாக அழிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 16 January 2018

கைப்பற்றப்பட்ட 928 கிலோ போதைப்பொருள் பகிரங்கமாக அழிப்பு

Image result for கைப்பற்றப்பட்ட 928 கிலோ போதைப்பொருள் பகிரங்கமாக அழிப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 928 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
நேற்று முற்பகல் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்திச் சபை வளாகத்தில் இவை அழிக்கப்பட்டன.
z p01 LARGEST2
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இவ்வாறு பகிரங்கமாக அழித்தொழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஒன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இதன் பெறுமதி 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.
z p01 LARGEST1 0
பொலிசாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களிடம் இருந்துவந்த சந்தேகத்திற்குத் தீர்வாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், கைப்பற்றப்படும் போதைப்பொருள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பகிரங்கமாக அழித்தொழிக்கும் முறைமையொன்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்த ஆண்டு சுற்றிவளைப்புகளை மேலும் அதிகரித்து போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாந்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆராச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages