நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 27 January 2018

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள்

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள்


நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென் கடற்றொழில் நீரியில்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் நடவடிக்கையை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அதிக அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதpயுள்ளதுடன் அரசாங்கத்தின் இந்த சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கும் எதிப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாகவே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிடார்.
 
எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லையென்று தெரிவித்த அமைச்சர் இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
 
இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறப்பானதாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages