தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈரோஸ் அமைப்பின் அரசியல் பிரிவாக இயங்கிய ஈழவர் ஜனநாயக முன்னணி உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. தற்கால உத்தியோக பூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பினர்களுக்கிடையில் கைச்சாத்தியாகியுள்ள நிலையிலேயே தற்போது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படுகின்றது. குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு செய்யும் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின செயலாளர் ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி., ஜனநயாக தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான பேராசிரியர் சிற்றம்பலம், சிவகரன், மற்றும் ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் அக்கூட்டமைப் பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளார்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்னமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment