இட்டாநகர் : அருணாச்சல பிரதேச எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்கள் இந்திய படைகளின் எதிர்ப்பை அடுத்து மீண்டும் பின்வாங்கியுள்ளனர். இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அம்மாநில எல்லைக்குள் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு சொந்தமான எல்லையோர கிராமத்தில் சாலை அமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்நாட்டு ஊழியர்கள் சிலர் கடந்த 28ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சியாங் மாவட்ட பகுதியில் ஊடுருவி இந்திய எல்லைக்குள் 1கிமீ தூரம் அவர்கள் வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பார்த்த கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.அவர் இந்தோ - திபெத் எல்லை படைகளிடம் இது குறித்து கூறியுள்ளார்.இதனையடுத்து இந்திய ராணுவ படை சீன ஊழியர்களை எதிர்கொண்டு திரும்பி செல்லுமாறு வற்புறுத்தினர். சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு சீனர்கள் திரும்பி சென்றனர்.
அவர்கள் திரும்பி சென்ற இடத்தில இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உட்பட சாலை போட பயன்படும் சாதனங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீருடை அணிந்த சீன ராணுவத்தினர் சிலரும் இந்திய படையின் எதிர்ப்பால் பின்வாங்கி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருணாசல பிரதேச எல்லைக்குள் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment