.அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அதிகமாக திக்ர் செய்ய வேண்டும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 9 January 2018

.அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அதிகமாக திக்ர் செய்ய வேண்டும்

Related image
உளுச் செய்த பின் கூறும் திக்ர்
( . . . مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ )
உங்களில் ஒருவர் முறையாக உளுச் செய்து விட்டு, பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பியவற்றில் நுழைந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா-ரலி, நூல் : முஸ்லிம் 345)

இ. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
 
( . . يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ )
அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றேன். அதற்கவர்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறு! என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4873)
(أوصاني خليلي أن أكثر من قول لاحول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة )

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages