மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
சதி பாசல மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு நாளைவரை (25) கொழும்பில் இடம்பெறும்.
செய்கின்ற பணியில் உள்ளத்தை ஈடுபடுத்தி அப்போதைய நிலையில் பிரக்ஞைபூர்வமாக உணர்வை பேணுவது உளந்தெளிநிலை என வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன், அதனை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சிறந்த முறையில் உளத் தெளிநிலையை பேணுவது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளும் வகையில் சமய, இன மற்றும் கலாசார பேதங்களின்றி உலகெங்கிலுமுள்ள நிபுணர்களுக்கான தளத்தை வழங்கி இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்விற்கு சங்கைக்குரிய உட ஈரியகம தம்மஜீவ நாயக்க தேரர் தலைமையில் 10 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாயக்க தேரர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்கிரம பெரேரா, சதி பாசல மன்றத்தின் ஆலோசகர் தாரா டி மெல் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment