சாலை வழியாக நடந்து செல்லும் அவன் மீது,
பொறுப்பற்ற காலை வானத்திலிருந்து
இறங்கும் ஒளி படருகிறது.
சாலை ஓரத்தில் உள்ள
நம்பிக்கையற்ற ஒரு பாசம்தான் உடல்.
அதில் விழுந்து மெலிதாய் சுட்ட ஒளியை
அண்ணார்ந்து பார்க்கிறான்
இன்னேரம் கடந்திருக்க வேண்டிய தூரம் அதிகம்
ஆனால், நிலவைச் சுற்றியே தனது நடைப்பயிற்சி
என நினைத்துக்கொண்டான்
மழைவிட்ட ஓசை காதுகளைக் கடந்து செல்வதைப்போல
முயல்கள் துள்ளி மறைகின்றன
முயற்சித்தால்,
தூரத்தை அழிப்பதற்கு இரண்டு
வாய்ப்புக்கள் இருக்கிறது
மனத்தாளில் ஒரு சோடி வாக்கியத்தை நினைப்பதாகும்
நெடுங்காலம் நடந்ததைப்போன்று
அந்த வாசகங்கள் உருப்பெற
மனதை பொதுவாய் திறந்துவைப்பதாகும்
மரக்கிளைகளைக் கடந்து
சாலையில் கிடக்கும் நீர்த்தொட்டியில்
முழுதாக இறங்கி அலைகளில் நிலா அசையும்போது
தூரத்தை கடந்திருப்பான்.
அவன் வீடுதிரும்புகிறான்
பாதச்சுவடுகளின் வேகத்திற்கேற்ப
சாலை அழிந்துகொண்டு வருகிறது.
Post Top Ad
Wednesday, 25 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment