- Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

ஆத்திரம் கொப்பளிக்கும் நேரங்களில் அறிவு நரம்புகள் அறுந்து விடுவதுண்டு.ஒரு கண நேரக் கோபத்தால் காலம் காலமாய் வருந்த வேண்டி ஏற்படும்.


இரத்தம் கொதிக்கும் எமது பேனைகளில் இருந்து சீழ் வடியக் கூடாது.அர்த்தமான வார்த்தைகளில் இருந்து வீணி வடியக்கூடாது.

கையில் ஒரு மொபைலும் வைபையும் இருக்கிறது என்பதற்காக விரல் சுழற்ற எழுத்தாணியில் இருந்து வார்த்தை உதிரும் அருகவிகள் அல்ல நாம்.எமது சொற்களும் வார்த்தைகளும் கவனமாக இருக்க வேண்டும்.

சண்முகா ஹபாயா பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில தீவிரவாத ஹிந்துக்கள்.எமது நியாயமான கோபங்கள் அவர்களோடு மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும்.

அதைவிடுத்து முழுத் தமிழ்ச் சமுகத்தின் மீது குற்றம் சாட்டுவதும்,அவர்களின் ஆடைக் கலாச்சாரத்தை நையாண்டி செய்வதும்,அவர்களின் வணக்க வழிபாடுகளை கிண்டலடிப்பதும் “எதிர்ப்பைத் தெரிவித்தல்”என்ற தலைப்பின் கீழ் வரவே வராது.அதற்கு வக்கிரத்தைத் தீர்த்தல் வெஞ்சம் தீர்த்தல் என்று சொல்லலாம்.

அவர்களைப் போல் நாமும் மாறக் கூடாது.நிதானமாக நாகரீகமாக பிரச்சினைகளையும் அதன் சூத்திரதாரிகளையும் அடையாளம் கண்டு நகர வேண்டும்.

இஸ்லாம் அழகானது.அந்த அழகான எதிர்ப்பை அழகாக வெளிப்படுத்துவோம்.எமது நியாயங்களை எடுத்துச் சொல்வோம்.அவர்களின் தவறுகளை அழகாக எத்திவைப்போம்.எமது நீதியான கோபங்களை தவறிழைத்தவர்களின் மீது மாத்திரம் காட்டுவோம்.திகணையில் ஒரு சிங்களவரை அடித்துக் கொன்றதற்காக முழு முஸ்லீம் சமுகத்திடம் வஞ்சம் தீர்த்த அறிவிலிகளைப் போல் ஒரு சிலரின் தவறுக்காக முழு தமிழ் சமுகத்தையும் வஞ்சம் தீர்க்க நாம் முனையக் கூடாது.

அதற்காக குனூத் நாஸிலாவை ஓதிக் கொண்டு குப்புறப் படுக்கும் கோழைகளாக எம்மை ஆக்க நினைப்பவர்களுக்கு நாம் செவிமடுக்கத் தேவையுமில்லை.எமது உரிமைகளை சிறுபான்மை என்ற பாவத்திற்காக விட்டுக் கொடுக்கத் தேவையுமில்லை.எவருக்கும் அடிபணிந்து எமது கௌரவத்தை யாருக்காகவும் இழக்கத் தேவையுமில்லை.

எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எமக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் நீதியாகவும் நிதானமாகவும் போராடுவோம்.

என்னைக் கேட்டால் எமது கோபங்கள் அனைத்தையும் இப்படியான பிரச்சினைகள் எமக்கு வரும்போது எமக்காகப் பேசுவதற்காகவென்றே நாம் தெரிவு செய்த எமது அரசியல்வாதிகளின் இயலாமை மீதுதான் கொட்ட வேண்டும்.எமது ஓங்கி ஒலிக்கும் குரல்கள் அவர்கள் உறக்கத்தைக் கலைக்க வேண்டும். அந்தக் கலைந்த உறக்கத்தோடு கல்வி அமைச்சர் காரியவாசத்தின் வீட்டு முன்றலில் அவர்கள் சென்று அவர்களை எதற்காகத் தெரிவு செய்தோமோ அதைச் செய்யும்வரைக்கும் எமது குரல் எமது அரசியல்வாதிகளின் காதுகளில் ஈயம் காய்ச்சிய நெருப்பாக இறங்க வேண்டும்.

“உன்னைத் தெரிவு செய்தது நாம் இதற்காகத்தான் உனது கடமையைச் செய்”

அதுதான் எமது போராட்டம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages