பந்தாவைப் பந்தாடுவோம்
****************************
திக்கெட்டுமிருந்து புகழ்
தேடிவந்த போதினிலும்
பக்குவமடைந்த ஜீவன்
பந்தாவை விரும்பமாட்டான்
அற்பத் தனமானவனே
சொற்ப புகழுக்காய்
சோடைபோய் விடுகின்றான்
வீக்கம் தலைக்கேறி
விற்பன்னன் போல் அனைத்திலுமே
தாக்கம் தெரியாமல்
தன்விரலை நுழைக்கின்றான்
அடக்கத்தை இழந்து
முழக்கமிடத் தொடங்குகிறான்
வழக்கத்தை மறந்து
வாய்காட்டப் பழகுகிறான்
பாவம் என்று தான் நினைத்து
பழகுதற்கு நாம்போனால்.....
மரியாதைக் குரியோரையும்
மதியாத நிலையாகுவான்
புரியாதற் புகழ் பாடுவான்
உச்சந் தலை மீதும்
உட்காரத் தயங்கமாட்டான்
கச்சை கட்டிக்கொண்டு
கர்ச்சித்தால் தணியமாட்டான்
இத்தனைக்கும் அவன்தகுதி
எத்தனையோ நூற்றுக்கப்பால்
புத்தியுள்ள ஜீவனுக்கு
புரியுமிது சக்திக்கப்பால்
ஆம்
அத்தனை நூறுகளும்
அப்படியே பார்த்திருக்க
வித்துவம் காட்டுவது
வேடிக்கைதான் நமக்கு
புத்தகப் பூச்சி
இவன்
புத்தி எங்கே போச்சு
பந்தாவை இவனும்
பந்தாய் நினைகிறானா
எல்லாத் திசையினிலும்
எதிர்த்தடிக்கலா மென்று
நொந்தாலும் யாரையும்தான்
நுனிகி ஆராய்ந்திடாமல்
குந்தகம் விளைக்கின்ற
குறுக்குமூளைப் பேர்வழிதான்
அந்தோ பரிதாபம்
அடக்கம் அறியாதவன்
தொடக்கம் தூயதெனின்
துளள்ளிக் குதிக்கமாட்டான்
படித்திருந்தாலும் கொஞ்சம்
பக்குவமாய் நடந்திருப்பான்
பாவம் அவனை நாமும்
பரிகசிக்கத் தேவையில்லை
பக்குவத்தை அவனிடத்தில்
தக்கவைக்க முயற்சிப்போம்
அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment