வீழ்ந்தது போதும் -அப்துல் குத்தூஸ் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

வீழ்ந்தது போதும் -அப்துல் குத்தூஸ்

வீழ்ந்தது போதும்
********************

மண்ணில் நடமாடும்
மனிதனாய்ப் பிறந்து
மனிதத்தை தொலைத்தோரால்
மகிழ்ச்சியை இழந்து.....

வயிற்றுப் பசிதீர்க்க
வாளேந்திப் போராடி
நிம்மதிக்காய் இடந்தேடி
நித்திரை இழந்து
உடுக்கின்ற துணிக்காக
ஊரெலாம் சுற்றி.....

கல்வியைப் பெறுவதற்கு
கஷ்டத்தில் மூழ்கி
காரியம் ஆவதற்கு
கைலஞ்சம் கொடுத்து
காவேரித் தண்ணீரின்
கனவுகளைக் கலைத்து
சீதனக் கொடுமைக்குள்
சிக்கித் தவித்து
நாலு சுவருக்குள்
நாட்களை நகர்த்தி.....

சுதந்திரக் காற்றை
சுவாசிக்காதிருந்து
நீட்தேர்வின் மூலம்
நீதி மறுக்கப்பட்டு
ஆளும் வர்க்கத்தின்
அடிமைபோல் இருந்து
பாழும் பாலியல்
பாவங்களைச் சகித்து
வாழும் நாளெல்லாம்
வயிறுகள் எரிந்து....

சட்டத்தின் ஓட்டைகளை
சகித்துக் கொண்டிருந்து
சமாதானப் புறாக்களின்
சாவைத் தரிசித்து
இஷ்டப்படி வாழ
இயலாமல் துன்புற்று...

வீழ்ந்தது போதும் 
வீறு கொண்டெழு தோழா

அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages