வழிப் பொருள்
---------------
ஆசுகவி அன்புடீன்
பாதை
பாய் விரித்திருப்பது
பயணிகள் பயணம் செய்வதற்கே
பயணிகள்
பயணம் செய்வதற்கே
பாதை பாய் விரித்திருக்கிறது
வழி வழி வந்தேன்
வழியிலோர் 'பொருள்'
தொலைத்தவர் யாரோ?
தொலைதூரப் பயணமோ?
பாதையில் பயணித்தவன்தான்
பொருளை
தவற விட்டிருக்க வேண்டும்
தவற விட்டவன்தான்
பாதையில் பயணித்திருக்க வேண்டும்
பாதையின் சொந்தக்காரர் பயணிகள்தான்
பாதையில் கிடக்கும்
பொருளின் சொந்தக்காரர் பயணிகள் எல்லோருமா?
பயணிகள் எல்லோருமா
பாதையில் கிடக்கும்
பொருளின் சொந்தக்காரர்?
இன்றோ நாளையோ
நாளை மறுநாளோ
தவறவிட்டவன்
தவற விட்டதை தேடி வரலாம்
உரியவன்
உரிய பொருளை உரிமை கோரலாம்
அதற்கிடையில்
வழி வழி வந்த
வழிப்போக்கன் நான்
எனக்கு சொந்தமில்லாத பொருளை
சொந்தம் கொள்ளலாமா?
உரிமை இல்லாத பொருளை
உரிமை கோரலாமா?
வழி வழி வந்த
வழிப்போக்கன் நான்
வழியினைத் தொடர்கிறேன்
வழிப்பொருள் வழியினில்...!
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment