மரணசாசனம்
------------------
ஆசுகவி அன்புடீன்
வைத்திருக்கிறேன்
வைத்திருக்கிறேன்
நீ தந்த முதல் முத்தத்தை மாத்திரமல்ல
கடைசி முத்தத்தின் சப்தத்தையும்
ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்....
தாமரை இதழின்
பனித்துளியின் ஈரலிப்பை
ஞாபகப்படுத்தும்
உன் இதழ் ஓர ஈரலிப்பின்
ஒவ்வொரு இலச்சினைகளையும்
ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்...
குறிஞ்சி நிலத்தில் வீசும்
மந்தமாருதத்தின்
சுகத்தை நினைவுபடுத்தும்
உன் உள் மூச்சின்
ஒவ்வொரு உள் வாங்கல்களையும்
வெளிப்படுத்தல்களையும்
என் நெஞ்சுக்கு மிக நெருக்கமாக
நினைவுபடுத்தி வைத்திருக்கிறேன்...
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr




No comments:
Post a Comment